விக்னேஷ் சிவனை பிரிவதாக வதந்தி : போட்டோவால் பதில் சொன்ன நயன்தாரா | தமிழில் மீண்டும் நடிக்கும் அன்னா பென் | சூர்யா சேதுபதியின் வாழ்க்கையில் விளையாடாதீர்கள் : அனல் அரசு வேண்டுகோள் | பிளாஷ்பேக் : நயன்தாராவை கவர்ச்சி களத்தில் தள்ளிய 'கள்வனின் காதலி' | 'பெத்தி' படத்தில் சிவராஜ் குமார் முதல் பார்வை வெளியீடு | ‛பரியேறும் பெருமாள்' ஹிந்தி ரீ மேக்கான ‛தடக் 2' டிரைலர் வெளியீடு, ஆக., 1ல் ரிலீஸ் | சிவகார்த்திகேயன் 24வது படம் தள்ளிப்போகிறதா? | தனுஷ் 54வது படத்தில் இணைந்தது குறித்து பிரித்வி பாண்டியராஜன் நெகிழ்ச்சி! | சிவராஜ் குமாரின் 131வது படம் அறிவிப்பு | 'லியோ'வில் என்னை வீணாக்கினார் லோகேஷ் : சஞ்சய் தத் கமெண்ட் |
மலையாள திரையுலகில் கிட்டத்தட்ட நூறு படங்களுக்கு மேல் நடித்த நடிகர் பிரித்விராஜ் முதல்முறையாக 2019ல் மோகன்லாலை வைத்து லூசிபர் என்கிற படத்தை இயக்கி ஒரு வெற்றிகரமான இயக்குனராகவும் தன்னை வெளிப்படுத்தினார். இதைத்தொடர்ந்து அடுத்த வருடமே அதே மோகன்லால் நடித்த ப்ரோ டாடி என்கிற ஒரு நகைச்சுவை படத்தையும் இயக்கி வெற்றி பெற்றார். இந்த நிலையில் லூசிபர் படத்தின் இரண்டாம் பாகம் எம்பிரான் என்கிற பெயரில் உருவாகும் என இரண்டு வருடங்களுக்கு முன்பே பிரித்விராஜ் அறிவித்திருந்தார்.
அடுத்தடுத்து மோகன்லால் பிரித்விராஜ் இருவருமே தொடர்ந்து பிசியாக நடித்து வந்ததால் அந்த படத்தின் பணிகள் துவங்குவதில் தாமதம் ஏற்பட்டது. பெரும்பாலும் வெளிநாட்டில் தான் இந்தப்படம் படமாக்கப்பட இருக்கிறது என்று ஏற்கனவே பிரித்விராஜ் கூறியிருந்தார். இந்த நிலையில் தற்போது லண்டனில் முகாமிட்டுள்ள பிரித்விராஜ், இந்த படத்திற்கான லொகேஷன் தேடும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து லண்டனில் இருந்து தான் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டு மூன்றாவது நாளாக எம்பிரான் படத்திற்கான லொகேஷன் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார் பிரித்விராஜ்.