புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
கன்னட திரையுலகில் இருந்து கேஜிஎப் என்கிற பிரம்மாண்ட படத்தை தொடர்ந்து, மீடியமான பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு மீண்டும் ஒரு மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற படம் காந்தாரா. இந்த படத்தில் நாயகனாக நடித்ததுடன் படத்தையும் இயக்கி இருந்தார் ரிஷப் ஷெட்டி. இதைத்தொடர்ந்து அடுத்ததாக அவர் நடிக்கும் படம் குறித்து மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அதுமட்டுமல்ல காந்தாரா படத்தின் இரண்டாம் பாகமும் உருவாக இருக்கிறது என்று சொல்லப்பட்டு வந்த நிலையில் காந்தாரா படத்தின் தயாரிப்பாளரே கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த தகவலை உறுதிப்படுத்தினார்.
இந்த நிலையில் தமிழில் லெஜெண்ட் படத்தில் அண்ணாச்சி சரவணனுக்கு ஜோடியாக நடித்த ஊர்வசி ரவுட்டேலா ரிஷப் ஷெட்டியுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளதுடன் 'காந்தாரா-2 லோடிங்' என்கிற கேப்ஷனையும் கொடுத்திருந்தார். இதைத்தொடர்ந்து காந்தாரா-2 படத்தில் ஊர்வசி ரவுட்டேலா கதாநாயகியாக நடிக்கிறார் என்பது போன்று செய்திகள் பரபரப்பாக பரவ ஆரம்பித்தன. ஆனால் காந்தாரா பட தயாரிப்பு நிறுவனத்தின் வட்டாரத்திலிருந்து வெளியான தகவலில், காந்தாரா-2ல் ஊர்வசி ரவுட்டேலா கதாநாயகியாக நடிக்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது..
“சமீபத்தில் ரிஷப் ஷெட்டி கலந்துகொண்ட ஒரு நிகழ்ச்சிக்காக அவர் வந்திருந்த இடத்திற்கு வேறு ஒரு நிகழ்ச்சிக்காக ஊர்வசி ரவுட்டேலாவும் வந்திருந்தார். அப்போது ரிஷப் ஷெட்டி அங்கு இருப்பதை கேள்விப்பட்டு அவரை சந்திக்க விரும்பினார். ரிஷப் ஷெட்டியும் மகிழ்ச்சியுடன் ஊர்வசியை சந்தித்தார். அப்போது எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்ட ஊர்வசி ரவுட்டேலா காந்தாரா-2 லோடிங் என்கிற வார்த்தையை குறிப்பிட்டதால்தான் இந்த அளவிற்கு அந்த செய்தி பரபரப்பாகிவிட்டது” என்று கூறியுள்ளார்கள்.