பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? | ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் சூரி | அருண் பிரசாத், அர்ச்சனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது | பாட்டி மறைவு : அல்லு அர்ஜூன் உருக்கம் | தெரு நாய் தொடர்பான விவாத நிகழ்ச்சி : மன்னிப்பு கேட்டார் படவா கோபி | டிசம்பரில் திரைக்கு வரும் வா வாத்தியார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ராஜூ முருகனின் மை லார்ட் என்ன பேசுகிறது? | டிரைலர் உடன் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த அதர்வாவின் தணல் படக்குழு! | 'குட்டி ஏஐ அனுஷ்கா' வீடியோ பகிர்ந்த அனுஷ்கா | வெளிநாடுகளில் 20 மில்லியன் டாலர் வசூலித்த 'கூலி' |
மலையாள திரையுலகில் இளம் முன்னணி நடிகராக வலம் வருபவர் உன்னி முகுந்தன். தமிழில் தனுஷ் நடித்த சீடன் படத்தில் இவரும் நடித்திருந்தார். அதுமட்டுமல்ல தெலுங்கில் வெளியான பாகமதி படத்தில் அனுஷ்காவுக்கு ஜோடியாகவும், அடுத்ததாக சமந்தாவின் நடிப்பில் வெளியாக உள்ள யசோதா படத்தில் முக்கிய வேடத்திலும் நடித்துள்ளார் உன்னி முகுந்தன். இந்த நிலையில் இவரே தயாரித்து கதாநாயகனாக நடித்த மேப்படியான் என்கிற திரைப்படம் இந்த வருடம் வெளியானது. இந்த படத்தை அறிமுக இயக்குனர் விஷ்ணு மோகன் என்பவர் இயக்கியிருந்தார்.
ஒரு நடிகராக உன்னி முகுந்தன் நடிப்புக்கு பெயர் பெற்றுத்தந்த இந்த படம் ஒரு தயாரிப்பாளராக வசூல் ரீதியாகவும் அவருக்கு ஓரளவு லாபத்தை கொடுத்தது. அதுமட்டுமல்ல பல சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு பல்வேறு பிரிவுகளில் பத்துக்கும் மேற்பட்ட விருதுகளை இந்த படம் அள்ளியது. இந்த படம் ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து சரியாக இரண்டு வருடம் முடிந்த நிலையில் அதன் ஞாபகார்த்தமாகவும் இயக்குனர் பெற்றுக்கொடுத்த வெற்றியை கொண்டாடும் விதமாகவும் அவருக்கு விலை உயர்ந்த கார் ஒன்றை பரிசளித்து அவரை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார் உன்னி முகுந்தன். அதேசமயம் இது பற்றி அவர் குறிப்பிடும்போது, இது ஒரு பரிசு அல்ல.. தகுதி வாய்ந்த உங்களுக்கு சேரவேண்டிய ஒன்று தான் என்று கூறியுள்ளார் உன்னி முகுந்தன்.