ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
மலையாளத்தில் மம்முட்டி நடிக்கவிருக்கும் புதிய படத்திற்கு காதல் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. நடிகை ஜோதிகா மம்முட்டிக்கு ஜோடியாக நடிக்கிறார். அதுவும் இருபது வருட இடைவெளி விட்டு மலையாள திரையுலகில் ஜோதிகா மீண்டும் அடியெடுத்து வைத்துள்ளார். இந்தப்படத்தை இயக்குனர் ஜியோ பேபி என்பவர் இயக்குகிறார். கடந்த வருடம் குறைந்த பட்ஜெட்டில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் குறிப்பாக பெண்களிடம் மிகப்பெரிய வரவேற்பையும் பெற்ற தி கிரேட் இண்டியன் கிச்சன் படத்தை இயக்கியவர் தான் இந்த ஜியோ பேபி.
இந்தப்படத்தை மம்முட்டியே தனது சொந்த தயாரிப்பாக தயாரிக்கிறார். இந்தநிலையில் இந்தப்படத்தின் படப்பிடிப்பு துவக்க விழா பூஜையுடன் ஆரம்பித்துள்ளது. இதையடுத்து இயக்குனர் ஜியோ பேபி சோசியல் மீடியாவில் நெட்டிசன்களின் கிண்டலுக்கு ஆளாகியுள்ளார்.
அதாவது இதற்கு முன் அவர் அளித்த பேட்டி ஒன்றில் தனது படங்களுக்கு வழக்கமாக நடத்தப்படும் பூஜை போன்ற விஷயங்களை எல்லாம் நடத்துவதில் தனக்கு விருப்பமில்லை என்றும், நேரடியாக படப்பிடிப்பிற்கு செல்வதை தான் விரும்புவதாகவும் கூறியிருந்தார்.
ஆனால் மம்முட்டியை பொறுத்தவரை தனது படங்களின் துவக்கவிழா, மற்றும் இசைவெளியீடு உள்ளிட்ட நிகழ்வுகளை பூஜையுடன் துவங்குவதில் மிகுந்த அக்கறை காட்டுபவர். அதனால் மம்முட்டியை வைத்து ஜியோ பேபி இயக்கும் இந்தப்படம், சினிமா வழக்கப்படி துவக்கவிழா பூஜையுடன் தான் துவங்கியுள்ளது. இதை குறிப்பிட்டுத்தான் நெட்டிசன்கள் அவரை கிண்டலடித்து வருகின்றனர்.