பிளாஷ்பேக்: ஈர்ப்புள்ள பாரதியாரின் பாடல்களும், இணையற்ற ஏ வி எம்மின் “நாம் இருவர்” திரைப்படமும் | கமலை சந்தித்த 'உசுரே' படக்குழுவினர்: பிக்பாஸ் பாசத்தில் ஜனனி ஏற்பாடு | 'மிஸ்டர் ஜூ கீப்பர், அடங்காதே' இந்தமுறையாவது சொன்னபடி வெளியாகுமா? | வடிவேலுக்கு இந்த நிலையா?: மாரீசன் காட்சிகள் ரத்தான பரிதாபம் | திருமணம் எப்போது? விஜய்தேவரகொண்டா பதில் இதுதான் | சினிமாவில் இது தான் எதார்த்தம் : திரிப்தி டிமிரி | சோசியல் மீடியாவில் விமர்சிக்கப்படும் சாய்பல்லவியின் சீதா தேவி கதாபாத்திரம்! | விஜய் இல்லாமல் எல்சியுவை தொடர சான்ஸ் இல்லை! - லோகேஷ் கனகராஜ் | பிரசாந்த் நீல், ஜூனியர் என்டிஆர் படத்தில் இணைந்த டொவினோ தாமஸ் | பாலிவுட் நடிகர் அமீர்கான் வீட்டுக்கு போன 25 ஐபிஎஸ் அதிகாரிகள்! |
கடந்த 2016ல் மோகன்லால் நடிப்பில் மலையாளத்தில் வெளியான புலிமுருகன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று மலையாள சினிமாவில் 100 கோடி வசூல் இலக்கை எட்டிய முதல் படம் என்கிற பெருமையையும் பெற்றது. இந்த படத்தை இயக்குனர் வைசாக் இயக்கியிருந்தார். இதைத்தொடர்ந்து அவர் மம்முட்டியை வைத்து அவர் இயக்கிய மதுர ராஜா திரைப்படம் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. தற்போது மோகன்லாலை வைத்து வைசாக் இயக்கியுள்ள மான்ஸ்டர் திரைப்படம் தீபாவளி வெளியீடாக வரும் அக்டோபர் 21ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
இந்த நிலையில் அடுத்ததாக பிரித்விராஜை வைத்து படம் இயக்குகிறார் வைசாக். இந்த படத்திற்கு கலிபா என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. பிரித்விராஜின் பிறந்தநாளான நேற்று இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டருடன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு முன்னதாக கடந்த 2010ல் மம்முட்டி, பிரித்விராஜ் இருவரும் இணைந்து நடித்த போக்கிரி ராஜா என்கிற படத்தின் மூலம் தான் இயக்குனராக அறிமுகமானார் வைசாக். அந்த வகையில் 12 வருடங்கள் கழித்து மீண்டும் இந்த கூட்டணி இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.