100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் மூக்குத்தி அம்மன் 2 : படத்தில் நடிப்பவர்கள் விபரம் | பாலிவுட்டை விட்டு விலக முடிவெடுத்த அனுராக் காஷ்யப் | என் பணியை சிறப்பாக செய்ய முயற்சிக்கிறேன் - கஜராஜ் ராவ் | விஷ்ணு விஷாலுக்கு வில்லன் ஆன செல்வராகவன்! | அடுத்த மாதம் 'ஜெயிலர் 2' படப்பிடிப்பு துவங்குகிறது | ராம்சரண் படத்திற்கு தயாரான சிவராஜ் குமார்! | நாகார்ஜூனா உடன் நடனமாடும் பூஜா ஹெக்டே! | பிளாஷ்பேக் : மோகன் கையில் மைக்கை கொடுத்த இயக்குனர் | பிளாஷ்பேக் : மறக்கடிக்கப்பட்ட மகா கலைஞன் கொத்தமங்கலம் சீனு | கோவில்களில் சினிமா பாட்டு பாட நீதிமன்றம் தடை |
கடந்த ஏழெட்டு வருடங்களில் கன்னட திரையுலகில் வெளியான படங்கள் தமிழில் ரீமேக் ஆனது என்றால் அது லூசியா மற்றும் யு டர்ன் ஆகிய இரண்டு படங்கள் மட்டும் தான். இந்த இரண்டு படங்களையும் இயக்கிய பவண்குமார் தற்போது இயக்கவுள்ள படம் தூமம். இந்தப்படத்தில் பஹத் பாசில் கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக நடிக்கிறார் அபர்ணா பாலமுரளி. மகேஷிண்டே பிரதிகரம் படத்தை தொடர்ந்து ஆறு வருடங்கள் கழித்து இவர்கள் இருவரும் மீண்டும் ஜோடி சேர்ந்து உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த படத்தின் துவக்க விழா பூஜை நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்வில் கேஜிஎப் இயக்குனர் பிரசாந்த் நீல் கலந்து கொண்டார். கன்னடத்தில் உருவாகும் படம் என்றாலும் தென்னிந்திய மொழிகள் நான்கிற்கும் சேர்த்து இந்த படம் தயாராகிறது. அதற்கேற்ற மாதிரி அட்சுயுத்குமார், ஜாய் மேத்யூ, தேவ்மோகன் என முக்கிய நடிகர்களும் இந்த படத்தில் நடிக்கின்றனர் இயக்குனர் பவண்குமாரின் முந்தைய படங்கள் போல இந்தப்படமும் ஒரு தனித்துவமான கதைக்களத்தில் தயாராக இருக்கிறதாம்.