கமல்ஹாசன் உடன் இணைந்து நடிக்க ஆசைப்படும் மிருணாள் தாகூர் | ஜெய் ஜோடியாக மீனாட்சி கோவிந்தராஜன் : காதல், திரில்லர் படமாக உருவாகிறது | அஜித்தின் அடுத்த படத்தை இயக்குகிறாரா தனுஷ்? | சர்ச்சையை கிளப்பிய நானியின் டாட்டூ வார்த்தை | கதாநாயகனாக மாறிய பிரேமலு காமெடி நடிகர் | அய்யப்பனும் கோஷியும் இயக்குனரின் கனவு படத்தை நிறைவு செய்த பிரித்விராஜ் | கூலி பட டீசர் மார்ச் 14ல் வெளியாவதாக தகவல் | அமரன் படத்துக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம் | ஐதராபாத்தில் சூர்யா 45வது படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு | கேங்கர்ஸ் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு |
தெலுங்கில் இப்போதும் முன்னணி ஹீரோவாக நடித்து வரும் சிரஞ்சீவி, இளம் படைப்பாளிகளின், வளர்ந்து வரும் நட்சத்திரங்களின் படங்களின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு அவர்களை ஊக்கப்படுத்துவதையும் வாடிக்கையாக வைத்துள்ளார். அப்படி முற்றிலும் புதுமுகங்கள் பங்களிப்பில் உருவாகியுள்ள 'பர்ஸ்ட் டே பர்ஸ்ட் ஷோ' என்கிற படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர் தனது ஆச்சார்யா படத்தின் தோல்வி குறித்தும் நகைச்சுவையாக பகிர்ந்து கொண்டார்.
இந்த நிகழ்வில் அவர் பேசும்போது, 'புதுமுகங்கள் நடித்த படம் தானே, தியேட்டருக்கு ரசிகர்கள் வருவார்களா என்பதை பற்றி கவலைப்பட தேவையில்லை. நல்ல கன்டெண்ட் இருந்தால் நிச்சயமாக தியேட்டருக்கு மக்கள் வருவார்கள். சமீபத்தில் அப்படி வெளியான பிம்பிசாரா, சீதாராமம், கார்த்திகேயா 2 ஆகிய படங்கள் இரண்டரை மணி நேரம் ரசிகர்களை இருக்கையில் அமரவைத்து படம் பார்க்க வைக்கும் விதமாக இருந்தது. கன்டன்ட் தான் அதற்கு காரணம். கன்டென்ட் இல்லை என்றால் இரண்டாவது நாளே தியேட்டர் காலியாகிவிடும். அது என் படமாக இருந்தாலும் கூட அதுதான் ரிசல்ட். அப்படி சமீபத்தில் பாதிக்கப்பட்டவர்களில் நானும் ஒருவன்” என்று சமீபத்தில் வெளியான தனது ஆச்சார்யா, படத்தின் தோல்வி குறித்து பேச்சுவாக்கில் நகைச்சுவையாக பகிர்ந்துகொண்டார் சிரஞ்சீவி.