ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் | 24 மணி நேரத்தில் 'ஜெயிலர்' சாதனையை முறியடித்த 'கூலி' டிரைலர் | 'கூலி' : அமெரிக்க பிரிமீயர் முன்பதிவில் 1 மில்லியன் வசூல் | தெலுங்குத் திரையுலகத்தில் இன்று முதல் ஸ்டிரைக் | 'ஏஐ' மூலம் மாற்றப்பட்ட கிளைமாக்ஸ்: தனுஷ் எதிர்ப்பு | ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! |
மலையாள திரையுலகில் மோகன்லால், மம்முட்டி ஆகியோருடன் சேர்ந்து மும்மூர்த்திகள் என அழைக்கப்பட்டவர் தான் நடிகர் சுரேஷ் கோபி. இடையில் சில காலம் அரசியலில் இறங்கிய சுரேஷ்கோபி, சினிமாவை விட்டு ஒதுங்கி அரசியலில் மட்டும் கவனம் செலுத்தி வந்தார். தற்போது மீண்டும் கடந்த இரண்டு வருடங்களாக திரையுலகம் பக்கம் கவனம் செலுத்தி தொடங்கியுள்ள சுரேஷ்கோபி, தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர் நடித்த காவல் என்கிற திரைப்படம் வெளியானது. இதைத்தொடர்ந்து பிரபல இயக்குனர் ஜோஷியின் டைரக்ஷனில் அவர் நடித்துள்ள பாப்பான் என்கிற திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் அவர் நடிக்கும் புதிய படத்திற்கு மே ஹூம் மூசா என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
வெள்ளிமூங்கா என்கிற சூப்பர் ஹிட் படத்தை இயக்கிய ஜிபு ஜேக்கப் தான் இந்த படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் சுரேஷ்கோபியின் ஜோடியாக பூனம் பஜ்வா நடிக்கிறார். இந்தப்படம் குறித்து வெளியிடப்பட்ட கிளிம்ப்ஸ், அதன் பின்னணியில் ஒலிக்கும் அரபு இசை மற்றும் இந்த படத்தின் டைட்டிலை பார்க்கும்போது இது ஒரு கேங்க்ஸ்டர் பாணியில் உருவாகும் படம் என தெரிகிறது.