நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் | 3 மணி நேரம் 40 நிமிடம் ஓடப் போகும் 'பாகுபலி தி எபிக்' | 3 ஹீரோக்கள் இணையும் படம் |
தெலுங்கு திரையுலகை பொறுத்தவரை இங்கு விஜய், அஜித் போலத்தான் மகேஷ்பாபுவும், பவன் கல்யாணும்.. அங்கேயும் இருவரது ரசிகர்கள் வழக்கம்போல முரண்பட்டு கிடந்தாலும் அவர்கள் இருவரும் நட்பு பாராட்டவே செய்கின்றனர். குறிப்பாக பவன் கல்யானை வெளிப்படையாக பாராட்ட தயக்கம் காட்ட மாட்டார் மகேஷ்பாபு. அந்தவகையில் தற்போது பவன் கல்யாண் மற்றும் ராணா நடிப்பில் வெளியாகியுள்ள பீம்லா நாயக் படம் பார்த்துவிட்டு பவன் கல்யாணின் நடிப்பை புகழ்ந்து தள்ளியுள்ளார் மகேஷ்பாபு.
இதுபற்றி அவர் கூறும்போது, “பவன் கல்யாண் எரியும் நெருப்பு போல இருக்கிறார். என்ன ஒரு நடிப்பு..? பரபரப்பான டேனியல் சேகராக ராணாவின் திரை தோற்றம் வியக்க வைக்கிறது. சமீப காலத்தில் த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸின் எழுத்தில் உருவான படங்களில் இது ரொம்பவே சிறப்பானது. எனது லென்ஸ்மேனாக இருக்கும் ரவி கே சந்திரன் மற்றும் தமனின் இசை, இயக்குனர் சாஹர் சந்திரா என மொத்த குழுவுக்கும் எனது பாராட்டுக்கள்” என கூறியுள்ளார் மகேஷ்பாபு.