படம்... பாராட்டு... பயம்... மனம் திறந்த ஸ்ரீகணேஷ் | நானும் மக்கள் பிரதிநிதி தான் - மதுவந்தி | விஷால் கோரிக்கையை நிராகரித்த சினிமா அமைப்புகள் | வெற்றிக்காக காத்திருக்கும் அப்பாவும், மகனும் | ஆட்டுக்கார அலமேலு, கல்யாணராமன், சுல்தான் : ஞாயிறு திரைப்படங்கள் | விக்ரமிற்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த் | கூலி படத்தில் வலிமையான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் : ஸ்ருதிஹாசன் | கீரவாணிவுடன் கம்போசிங் பணியில் ராஜமவுலி | வார் 2 படத்திற்காக மீண்டும் சிக்ஸ்பேக்கிற்கு மாறிய ஜூனியர் என்டிஆர் | கூலி படத்தில் ரஜினிக்காக லோகேஷ் கனகராஜ் செய்த மாற்றம் |
மலையாள திரையுலகில் தற்போதும் பிசியான நடிகையாக முன்னணி வரிசையில் இருப்பவர் நடிகை மஞ்சு வாரியர். இதற்கிடையே தயாரிப்பாளராக மாறி லலிதம் சுந்தரம் என்ற படத்த்தை தயாரித்து அதில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார் மஞ்சு வாரியர். திடீரென பட தயாரிப்பில் இறங்கியதற்கு காரணம் அவரது தம்பிக்காக தான்.. ஆம்.. இந்த படத்தின் மூலம் மஞ்சு வாரியாரின் தம்பி மது வாரியர் இயக்குனராக அறிமுகமாகி இருக்கிறார்.
இந்த படத்தில் மஞ்சுவாரியர் ஒரு தொழிலதிபராக நடிக்க, அவரது கணவராக பிஜுமேனன் நடிக்கிறார். இதுவரை மஞ்சு வாரியர் ஏற்று நடிக்காத கதாபாத்திரம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் ஒரு தயாரிப்பாளராக இந்தப்படத்தை நேரடியாக ஒடிடி தளத்திலேயே வெளியிட முடிவு செய்துவிட்டார் மஞ்சு வாரியர். டிஸ்னி ஹாட்ஸ்டார் நிறுவனம் இந்தப்படத்தை வெளியிடுகிறது. ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் சொல்லப்படுகிறது.