அர்ஜுன் தாஸ் ஜோடியாக மமிதா பைஜூ? | திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் ரம்யா பாண்டியனுக்கு கிடைத்த பவர் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | விஜய் சேதுபதியை இயக்கும் துரை செந்தில்குமார் | படையப்பா... ஜெயிலர் 2... ரம்யா கிருஷ்ணன் பகிர்ந்து சுவாரஸ்யம் | அடுத்த படத்திற்காக கதை கேட்கும் பவிஷ் | வாடிவாசல் படப்பிடிப்பில் ஏற்பட்ட திடீர் மாற்றம் | அல்லு அர்ஜுன், அட்லி படம் : கதாநாயகிகள் வாய்ப்பு யாருக்கு? | ஒரு பாட்டாவது வைத்திருக்கலாம்…. த்ரிஷா, சிம்ரன் ரசிகர்கள் வருத்தம் | 2025ல் இரண்டாவது 50 நாள் படம் 'டிராகன்' |
மலையாள சினிமாவில் மம்முட்டி வளர்ந்து வந்த காலத்தில் அவருக்கு மிகப்பெரிய அங்கீகாரம் கொடுத்த படம் தான் 1988-ல் வெளியான ஒரு சிபிஐ டைரிக்குறிப்பு. சொல்லப்போனால் இந்த படம் தான் தமிழ் சினிமா ரசிகர்களிடமும் மம்முட்டியை கொண்டு சேர்த்தது. அதன்பிறகு இந்தப்படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் ஜாக்ரதா, சேதுராம ஐயர் சிபிஐ, நேரறியான் சிபிஐ என என்கிற பெயர்களில் இந்த 34 வருடங்களில் வெளியாகியுள்ளன.
இந்த நான்கு பாகங்களையும் இயக்கியவர் இயக்குனர் மது.. தமிழில் மௌனம் சம்மதம் என்கிற படத்தை இயக்கியவர் இவர்தான். இந்த நான்கு பாகங்களுக்கும் கதை எழுதியவர் கதாசிரியர் எஸ்.என்.சுவாமி. தற்போது பதினைந்து வருட இடைவெளிக்கு பிறகு இதே கூட்டணியில் இந்தப்படத்தின் 5ஆம் பாகம் தயாராகி வருகிறது. இந்தப்படத்திற்கு தற்போது 'தி பிரெய்ன்' என டைட்டில் வைத்து அதிகாரப்பூர்வ போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர்.