லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
தமிழ், தெலுங்கில் ஐந்து வருடங்களுக்கு முன்பு அடுத்தடுத்து 'பிக் பாஸ்' நிகழ்ச்சி ஆரம்பமானது. இரண்டு மொழிகளிலும் ஐந்து சீசன்களைக் கடந்துள்ளது. தமிழில் கமல்ஹாசன் கடந்த ஐந்து சீசன்களாகவும், தெலுங்கில் கடந்த மூன்று சீசன்களாக நாகார்ஜுனாவும் தொகுத்து வழங்கினர்.
தமிழில் ஓடிடி தளத்திற்காக 'பிக் பாஸ் அல்டிமேட்' என்ற நிகழ்ச்சி கடந்த ஜனவரி மாதக் கடைசியில் ஆரம்பமானது. ஓடிடி தளத்திலும் கமல்ஹாசனே தொகுத்து வழங்கினார். ஆனால், கடந்த வாரத்துடன் நிகழ்ச்சியிலிருந்து விலகிவிட்டார். இந்த வாரம் முதல் சிம்பு தொகுத்து வழங்க உள்ளார்.
தமிழைப் போலவே தெலுங்கில் ஓடிடி தளத்தில் இன்று முதல் 'பிக் பாஸ் நான்ஸ்டாப்' என்ற பெயரில் நிகழ்ச்சி ஆரம்பமாகிறது. இந்த நிகழ்ச்சியை நாகார்ஜுனாவே தொகுத்து வழங்குகிறார். அதற்கான டிவி புரோமோக்கள் ஏற்கனெவே வெளியாகி உள்ளது.
ஓடிடி தளத்தில் தமிழில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிக்கு பெரிய வரவேற்பில்லை, அதனால்தான் கமல்ஹாசன் விலகியதாகவும் ஒரு தகவல் உண்டு. அப்படியிருக்க தெலுங்கில் இன்று ஆரம்பிக்க உள்ளார்கள். தெலுங்கு ஓடிடி பிக் பாஸ் நிகழ்ச்சி 70 நாட்கள் நடைபெற உள்ளதாம். இதில் 17 போட்டியாளர்கள் கலந்து கொள்ள உள்ளதாகத் தகவல். இன்று மாலை 6 மணிக்கு நிகழ்ச்சி ஆரம்பமாகிறது. யார் யார் போட்டியாளர்கள் என்பது அப்போதுதான் தெரியும்.