2025ல் தமிழ் சினிமா: இப்படியே போய்விடுமா ??? | இந்த வாரமும் இத்தனை படங்கள் வெளியீடா... தாங்குமா...? | தமனின் கிரிக்கெட்டைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர் | 300 கோடியைக் கடந்த 3வது படம் 'ஓஜி' | பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் | ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி | பிளாஷ்பேக்: 400 படங்களில் நடித்த கோவை செந்தில் | 300 கோடி வசூல் சாதனை புரிந்த 'லோகா' | பிளாஷ்பேக்: முதல் நட்சத்திர ஒளிப்பதிவாளர் |
கடந்த இரண்டு வருடங்களாகவே ஹன்சிகாவின் படம் எதுவும் வெளியாகவில்லை. அவர் நடித்துவரும் மகா படம் நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருக்கிறது. இதனால் எல்லாம் ஹன்சிகாவின் மார்க்கெட் அவ்வளவுதானா என தப்புக்கணக்கு போட்டுவிட வேண்டாம். இந்த வருடத்தில் அதிக படம் நடிக்கும் ஒரே நடிகை அவர் தான் என சொல்லும் அளவுக்கு கைவசம் அரை டஜன் படங்களுக்கு மேல் வைத்திருக்கிறார் ஹன்சிகா.
அந்தவகையில் தெலுங்கில் அவர் நடித்துள்ள 'மை நேம் இஸ் ஸ்ருதி' என்கிற படம் விரைவில் வெளியாக இருக்கிறது. சமீபத்தில் இதன் டீசர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்தப்படத்தை ஸ்ரீனிவாஸ் ஓம்கர் என்பவர் இயக்குகிறார். ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கும் பின்னால் ஒரு பெண் இருப்பார் என சொல்வார்கள். ஆனால் ஒரு பெண் எதிர்கொள்ளும் அத்தனை பிரச்னைகளுக்கும் ஒரு ஆண் எப்படி பொறுப்பாகிறான் என்பதை பற்றிய படமாக இது உருவாகியுள்ளதாம். இந்தப்படத்தில் விளம்பரப்பட இயக்குனர் கதாபாத்திரத்தில் ஹன்சிகா நடித்துள்ளார்.