தமனின் கிரிக்கெட்டைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர் | 300 கோடியைக் கடந்த 3வது படம் 'ஓஜி' | பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் | ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி | பிளாஷ்பேக்: 400 படங்களில் நடித்த கோவை செந்தில் | 300 கோடி வசூல் சாதனை புரிந்த 'லோகா' | பிளாஷ்பேக்: முதல் நட்சத்திர ஒளிப்பதிவாளர் | நான்கு நாட்களில் 300 கோடி வசூலைக் கடந்த 'காந்தாரா சாப்டர் 1' | ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு |
தெலுங்கு இளம் முன்னணி நடிகர்களில் ஒருவரான அல்லு அர்ஜுன் அதிக அளவில் ரசிகர்களை கொண்டவர்.. இவரது படப்பிடிப்பு தளங்களுக்கு ரசிகர்கள் வந்தால் கூட அதுபற்றி கோபம் கொள்ளாமல் ஊக்கப்படுத்தவே செய்பவர்.. தற்போது அவர் நடித்துள்ள புஷ்பா படம் வரும் டிச-17ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. இதற்கான புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வரும் அல்லு அர்ஜுன், தனது ரசிகர்களை தனியாக சந்திப்பதற்காக நேற்று ஹைதராபாத் நாகர்ஜுனா கன்வென்ஷன் ஹாலில் ஏற்பாடுகள் செய்யப்படிருந்தன.
ஆனால் அளவுக்கு அதிகமானோர் அங்கு கூடியதால் நெரிசல் ஏற்பட்டு அதில் பத்துக்கும் அதிகமான ரசிகர்கள் காயமடைந்தனர். இந்த தகவல் இந்த நிகழ்விற்கு கிளம்பி வந்துகொண்டிருந்த அல்லு அர்ஜுனுக்கு தெரிவிக்கப்பட்டது. இதனால் டென்சன் ஆன அல்லு அர்ஜுன் நிகழ்ச்சியை ரத்து செய்து பாதிவழியிலேயே வீட்டிற்கு திரும்பினார்.
பின்னர் இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிவிப்பில், “இன்று நிகழவிருந்த ரசிகர்கள் சந்திப்பில் கலந்துகொள்ள வந்திருந்த ரசிகர்கள் சிலர் காயமடைந்ததாக கேள்விப்பட்டேன்.. அவர்கள் பற்றிய விபரங்களை எனது குழுவினர் கவனித்து எனக்கு உடனுக்குடன் தகவல்களை தெரிவித்து வருகின்றனர். இனி இதுபோன்று ஒரு நிகழ்வு மறுபடியும் நிகழாதவாறு நான் கூடுதல் கவனம் எடுத்து பார்த்துக்கொள்வேன்” என்று கூறியுள்ளார்.