அக்கா, தங்கை, அம்மாவாக நடிப்பேன்: ரஜிஷா விஜயன் | அல்லு அர்ஜுன் ரசிகர் மன்றம் பதிவுடன் ஆரம்பம் | அன்றும்... இன்றும்... மணிகண்டனின் தன்னம்பிக்கைப் பதிவு | சினிமா வருமானம் போச்சு: அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய சுரேஷ் கோபி முடிவு | மனநல தூதர் ஆனார் தீபிகா | திருத்தங்களுடன் வெளிவருகிறது 'அஞ்சான்' | எனக்கு படங்கள் இல்லையா? : மொய் விருந்தில் ஆவேசமான ஐஸ்வர்யா ராஜேஷ் | 'காந்தாரா' பாணியில் உருவாகும் 'மகாசேனா' | பிளாஷ்பேக்: விஜயகாந்த், கமல் இணைந்து நடித்த ஒரே படம் | பிளாஷ்பேக்: தம்பியை இயக்குனராக்கி அழகு பார்த்த அக்கா |
சிரஞ்சீவி நடித்த சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் சிரஞ்சீவியுடன் இணைந்து நடித்திருந்த தமன்னா, தற்போது இரண்டாவது முறையாக மெஹர் ரமேஷ் இயக்கத்தில் சிரஞ்சீவி நடிக்கும் போலா சங்கர் படத்திலும் அவருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இந்த படத்தில் நடிப்பது குறித்து தமன்னாவிடத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்த நிலையில் தற்போது அவர் அக்ரிமெண்டில் சைன் பண்ணி விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
தமிழில் அஜித் நடித்த வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்கான இந்த போலா சங்கர் படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக தமன்னா நடிக்க, தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நவம்பர் 15ஆம்தேதி முதல் தொடங்கும் நிலையில், ஜனவரி மாதம் முதல் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார் தமன்னா. இந்த படம் தவிர தெலுங்கில் இன்னொரு மூத்த ஹீரோவுடன் நடிப்பதற்கும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார் தமன்னா.