100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் மூக்குத்தி அம்மன் 2 : படத்தில் நடிப்பவர்கள் விபரம் | பாலிவுட்டை விட்டு விலக முடிவெடுத்த அனுராக் காஷ்யப் | என் பணியை சிறப்பாக செய்ய முயற்சிக்கிறேன் - கஜராஜ் ராவ் | விஷ்ணு விஷாலுக்கு வில்லன் ஆன செல்வராகவன்! | அடுத்த மாதம் 'ஜெயிலர் 2' படப்பிடிப்பு துவங்குகிறது | ராம்சரண் படத்திற்கு தயாரான சிவராஜ் குமார்! | நாகார்ஜூனா உடன் நடனமாடும் பூஜா ஹெக்டே! | பிளாஷ்பேக் : மோகன் கையில் மைக்கை கொடுத்த இயக்குனர் | பிளாஷ்பேக் : மறக்கடிக்கப்பட்ட மகா கலைஞன் கொத்தமங்கலம் சீனு | கோவில்களில் சினிமா பாட்டு பாட நீதிமன்றம் தடை |
படம் : தில்
வெளியான ஆண்டு : 2001
நடிகர்கள் : விக்ரம், லைலா, ஆஷிஷ் வித்யார்த்தி, விவேக்
இயக்கம் : தரணி
தயாரிப்பு : லட்சுமி புரொடக் ஷன்ஸ்
காக்க காக்க கனகவேல் காக்க... என, முறுக்கேறிய உடம்புடன் விக்ரம் ரணகளம் செய்த படம், தில். பல ஆண்டு போராட்டத்திற்கு பின், சேது படம் வழியாக தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருந்த வேளையில், தில் படம் விக்ரமிற்கு நட்சத்திர நாயகன் அடையாளத்தை கொடுத்தது. இப்படத்தில் இருந்து தான், டைட்டிலில், சியான் என்ற அடைமொழியுடன் அவரின் பெயர் இடம்பெற துவங்கியது.
எதிரும் புதிரும் படத்தை இயக்கியபோது, இயக்குனர் தரணி, விபத்தில் சிக்கினார். அதன்பின் மீண்டெழுந்தார். சக்கர நாற்காலியில் இருந்தபடியே, தில் காட்டினார். போலீஸ் வேலைக்கு காத்திருக்கும் நடுத்தர வர்க்க இளைஞராக விக்ரம். போலீஸ் அதிகாரி ஆஷித் வித்யார்த்தியுடன் மோதல் ஏற்படுவதால், விக்ரமின் கனவுக்கு இடையூறு ஏற்படுகிறது. இதை அவர் எப்படி எதிர்கொண்டார் என்பது தான், படத்தின் திரைக்கதை.
படத்தின் முதல் காட்சி முதல், கிளைமேக்ஸ் வரை, பார்வையாளர்களை விறுவிறுப்பின் உச்சத்திலேயே, தரணியில் திரைக்கதை வைத்திருந்தது. பக்கா கமர்ஷியல் ஜானரில் கலக்கிய திரைப்படம் தில். வில்லனாக வந்த ஆஷித் வித்யார்த்தி, இப்படத்திற்கு பின், பல படங்களில் மிரட்டினார். கதாநாயகி லைலா, குல்பி போல ரசிக்க செய்தார்.
வித்யாசாகரின் பின்னணி இசையும், பாடல்களும் பட்டையை கிளப்பின. கண்ணுக்குள்ள, மச்சான் மீசை, உன் சமையலறையில்... பாடல்கள் ரசிக்க வைத்தன. தமிழக அரசின் திரைப்பட விருதுகளில், ஆறு விருதுகளை, இப்படம் வென்றது. தமிழில் மிகப்பெரிய வெற்றி பெற்ற இப்படம் தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், பெங்காலி என, நான்கு மொழிகளில், ரீமேக் செய்யப்பட்டது.
அநீதிக்கு எதிராக போராடினால், தில்!