பிரச்னைகளால் பல விஷயங்களை கற்றுக்கொண்டேன்: சமந்தா | குட் பேட் அக்லி : நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா | துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே படத்தில் இணைந்த ரம்யா கிருஷ்ணன் | விஜய் சேதுபதியிடம் கதை சொன்ன சிவா | பறவையை பச்சை குத்திய பாலிவுட் நடிகை கிர்த்தி சனோன் | கழுத்துல கருங்காலி மாலை ஏன் : தனுஷ் சொன்ன கலகல தாத்தா கதை | 250 கோடி வசூலைக் கடந்த 'லோகா' | 3 நாளில் 80 கோடி கடந்த 'மிராய்' | 'இட்லி கடை' கதை இதுதான் என சுற்றும் ஒரு கதை | 'இளையராஜா' பயோபிக் : திரைக்கதை எழுத ரஜினிகாந்த் ஆர்வம் |
அட்லீ சில வருடங்களுக்கு முன்பு ஷாருக்கானை சந்தித்து கதை கூறியுள்ளார். அது ஷாருக் கானுக்கு பிடிக்கவே நடிக்க சம்மதித்துள்ளார். நயன்தாரா அந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். பாலிவுட் நடிகை சான்யா மல்ஹோத்ராவும் அந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
தற்போது இந்தப் படத்தில் நடிகை பிரியாமணி இணைந்துள்ளார். ஷாருக் கான் நடிப்பில் 2013-ம் ஆண்டு வெளியான சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் பிரியாமணி ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடியிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது இரண்டாவது முறையாக அவர் ஷாருக் உடன் இணைந்து நடிக்கிறார். படப்பிடிப்பு புனேவில் துவங்க உள்ளது.
இந்நிலையில் இந்த படத்தின் தலைப்பு பற்றி ஒரு தகவல் கசிந்துள்ளது. அதில் இந்த படத்திற்கு "Lion" என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு அனுமதி கடிதத்தில் இருந்து இந்த தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும் தற்காலிகமாக தோராய (Tentative) தலைப்பாக இது இருக்கலாம் என்றும், படத்தின் அதிகாரப்பூர்வ (Official) தலைப்பு இனிமேல் தான் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.