தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
பிரபுதேவா இயக்கத்தில் சல்மான்கான், திஷா பதானி மற்றும் பலர் நடித்த 'ராதே' படம் ரம்ஜானை முன்னிட்டு டிஜிட்டல் தளங்களில் நேரடியாக வெளிவந்தது. படம் பற்றி மோசமான விமர்சனங்கள் தான் அதிகமாக வந்தது.
அப்படி ஒரு மோசமான விமர்சனத்தை பிரபல ஹிந்திப்பட விமர்சகரான கமால் கான் என்பவர் வெளியிட்டிருந்தார். ஹிந்தி நடிகர்கள், நடிகைகளை தனிப்பட்ட முறையில் விமர்சிப்பவர் என்று அடிக்கடி சர்ச்சைகளில் சிக்குபவர் தான் இந்த கமால் கான்.
'ராதே' விமர்சனத்திற்காக தற்போது அவர் மீது மும்பை கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர்ந்திருக்கிறார் சல்மான் கான். அது பற்றிய வக்கீல் நோட்டீசை வெளியிட்ட கமால் கான், “எனது பாலோயர்களுக்காக நான் விமர்சனம் செய்கிறேன். நான் படங்களுக்கு விமர்சனம் செய்வதை நிறுவத்துவதற்குப் பதிலாக நீங்கள் நல்ல படங்களை எடுக்கலாம் சல்மான் கான்,” என நேற்று டுவீட் செய்திருந்தார் கமால் கான்.
ஆனால், இன்று காலை வெளியிட்டுள்ள டுவீட்களில், “டியர் சலீம்கான் சாப், நான் சல்மான் கானின் படங்களையோ வாழ்க்கையையோ அழிக்க இங்கு இல்லை. நான் ஒரு கேளிக்கைக்காக விமர்சனம் செய்கிறேன். என் விமர்சனத்தால் சல்மான் பாதிக்கப்பட்டிருந்தால் இனி நான் விமர்சனம் செய்யவில்லை. அவர் தனது படத்தை விமர்சிக்க வேண்டாம் எனக் கேட்டிருந்தால் நான் விமர்சனம் செய்திருக்க மாட்டேன்.
அப்படி சொல்லியிருந்தால் அவர் படத்தை நான் விமர்சனம் செய்யாமலிருக்க இப்படி வழக்கு தொடர்ந்திருக்கத் தேவையில்லை. சலீம் சார், நான் யாரையும் புண்படுத்த இங்கில்லை. எதிர்காலத்தில் நான் அவர் படங்களை விமர்சனம் செய்யவில்லை. அதனால் வழக்கு தொடர்வதை நிறுத்தச் சொல்லுங்கள். நீங்கள் விரும்பினால் விமர்சன வீடியோவையும் நீக்கி விடுகிறேன்,” என சல்மான் கானின் அப்பா சலீம் கானுக்கு டுவீட் செய்து பதிவிட்டுள்ளார்.