துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
கொரோனா முதல் அலையின்போதே திரையுலகை சேர்ந்தவர்களுக்கு மட்டுமல்லாமல், பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கும் அதிக அளவிலான நிதி உதவி மற்றும் நிவாரண பொருட்களை வழங்கியவர் பாலிவுட் நடிகர் அக்சய் குமார். அந்தவகையில் தற்போது கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்து வரும் நிலையில், ஏற்கனவே நிவாரண நிதி அளித்துள்ள அக்சய் குமார், தற்போது 3600 டான்சர்களுக்கு ஒருமாதத்திற்கு தேவையான உணவுப்பொருள்களை வழங்கியுள்ளார்.
இந்த தகவலை நடன இயக்குனர் கணேஷ் ஆச்சார்யா என்பவர் வெளியிட்டுள்ளார்.. நடக்குழுவினருக்கு உதவி செய்யும்படி அக்சய் குமாரிடம் தான் கோரிக்கை வைத்ததாகவும் அதை தொடர்ந்து 3600 டான்சர்களுக்கு ஒருமாதத்திற்கு தேவையான நிவாரண பொருட்களுக்கான தொகையை தனது கணேஷ் ஆச்சார்யா அறக்கட்டளையிடம் அக்சய் குமார் கொடுத்து விட்டதாகவும் கூறியுள்ளார். மேலும் நடன குழுவில் இருப்பவர்களுக்கு இந்த தொகை பணமாகவோ அல்லது நிவாரண பொருட்களாகவோ அவர்களது தேவைக்கேற்ப வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார். கணேஷ் ஆச்சார்யா.