நயன்தாரா வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் | பிளாஷ்பேக்: மம்பட்டியான் பாணியில் உருவான 'கரிமேடு கருவாயன்' | பிளாஷ்பேக்: தமிழ், பெங்காலியில் உருவான படம் | கார்த்தி நடிக்கும் ‛வா வாத்தியார்' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தமிழகம் பக்கமே வரலை... ஆனாலும் தமிழில் ஹிட் | பக்தி மயத்தில் கோலிவுட் பார்ட்டிகள் | ‛‛2 ஆயிரம் சம்பளம் கேட்டேன், 4 லட்சம் கொடுத்தார் நட்டி'': சிங்கம்புலி நெகிழ்ச்சி | சொந்த செலவில் பிளைட்டில் வந்து ரஞ்சித்துக்கு உதவிய விஜய்சேதுபதி | கன்னடத்தில் அதிக வசூல் படங்கள் : இரண்டாம் இடம் பிடித்த 'காந்தாரா சாப்டர் 1' | அடுத்தடுத்து வெளியாகும் கவின் படங்களின் அப்டேட் |
கர்நாடகத்தில் பிறந்து உலக அழகியாக பட்டம் வென்று சினிமாவுக்கு வந்தவர் பிரியங்கா சோப்ரா. பாலிவுட் படங்களில் நடித்தவர் தற்போது ஹாலிவுட் படங்கள் மற்றும் தொடர்களில் நடித்து வருகிறார். ஹாலிவுட் பாடகர் நிக் ஜோன்சை திருமணம் செய்து கொண்ட அவர் அமெரிக்காவில் கணவருடன் வசித்து வருகிறார்.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலின் முதல் அலை தொடங்கியபோது அமெரிக்க வாழ் இந்தியர்கள் மற்றும் ஆன்லைனில் படிக்கும் குழந்தைகளுக்கு உதவினார். தற்போது இரண்டாவது அலையில் இந்தியா பெரிய அளவில் பாதிக்கப்பட்டு இருப்பதால் நிதி திரட்டும் பணியை முடுக்கி விட்டுள்ளார். தனியார் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து நிதி திரட்டும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். இதுவரை 3 மில்லியன் அமெரிக்க டாலர் நிதி வசூலாகி இருப்பதாக கூறியிருக்கிறார்.
இதுகுறித்து அவர் தனது இன்ஸ்ட்ராகிராமில் கூறியிருப்பதாவது: எனது முயற்சிக்கு மக்கள் அளித்த ஆதரவால் இதுவரை 20 கோடி ரூபாய் வரை நிதி திரண்டுள்ளது. தொடர்ந்து நிதி குவிந்து வருகிறது. இந்த நிதியில் இருந்து 10 கொரோனா மையங்களுக்கு 500 ஆக்சிஜன் செறிவூட்டிகள், 422 ஆக்சிஜன் சிலிண்டர்கள் வாங்கி கொடுத்துள்ளோம். 6 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடவும் ஏற்பாடு செய்து வருகிறோம். நன்கொடை அளித்த ஒவ்வொருவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என்று கூறியிருக்கிறார் பிரியங்கா.