கார்த்திக் சுப்பராஜ், சிவகார்த்திகேயன் புதிய கூட்டணி | தமன்னாவை ஏமாற்றிய ஒடேலா- 2! | சமூக வலைதளங்களில் இருந்து மீண்டும் பிரேக் எடுத்த லோகேஷ் கனகராஜ் | மனைவிகிட்ட சண்டை போட்டுக்கிட்டே இருந்தா வெளியில போய் ஜெயிக்க முடியாது! -நடிகை ரோஜா | டி.ராஜேந்தரின் பாடலை தழுவி உருவாக்கப்பட்ட சூர்யாவின் ரெட்ரோ பட பாடல்! | முன்னேறிச் செல்லுங்கள்- தமிழக கிரிக்கெட் வீரருக்கு சிவகார்த்திகேயன் பாராட்டு! | புதிய விதிகளை அமல்படுத்திய ஆஸ்கர் அகாடமி | என்ன சமந்தா தனது முதல் இரண்டு படங்கள் பற்றி இப்படி சொல்லிட்டார்.... | 'தொடரும்' படத்தில் நடிப்பதற்கு முன் இயக்குனர் மீது ஷோபனாவுக்கு வந்த சந்தேகம் | அட்ஜஸ்ட்மென்ட் குறித்த மாலா பார்வதியின் கருத்துக்கு நடிகை ரஞ்சனி கண்டனம் |
பிரபுதேவா இயக்கத்தில், சல்மான் கான், திஷா பதானி மற்றும் பலர் நடித்த 'ராதே' படம் இரண்டு தினங்களுக்கு முன்பு டிஜிட்டல் தளங்களில் 'பணம் செலுத்தி படம் பார்க்கும் முறை'யில் வெளியிடப்பட்டது. சர்வர்கள் 'கிராஷ்' ஆகும் நிலையில் படத்திற்கு பெரும் வரவேற்பு இருந்துள்ளது. முதல் நாளில் இப்படத்தை 42 லட்சம் பேர் பார்த்துள்ளதாக படத்தின் நாயகன் சல்மான் கான் டுவீட் செய்துள்ளார். ஒருவர் படத்தைப் பார்க்க 249 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். அப்படிப் பார்த்தால் 42 லட்சம் பேர் 249 ரூபாய் செலுத்தி படம் பார்த்த வகையில் 104 கோடியே 58 லட்ச ரூபாய் வருகிறது.
இரண்டு மணி நேர படத்தை ஒரே நாளில் திரும்பவும் பலர் பார்த்திருக்க வாய்ப்பில்லை. அதுவும் மோசமான விமர்சனம் வந்துள்ள படத்தை தீவிரமான சல்மான் கான் ரசிகர் கூட இரண்டாவது முறை பார்த்திருப்பாரா என்பது சந்தேகம்தான்.
இருந்தாலும் 104 கோடி ரூபாய் வசூல் இல்லை என்றாலும் குறைந்த பட்சம் 75 கோடிக்கும் மேல் இப்படம் வசூலித்திருக்கலாம் என்றும் சொல்கிறார்கள். இந்த வார இறுதிக்குள் இப்படத்தை இன்னும் பலர் பார்க்க வாய்ப்புள்ளது.
தியேட்டர்களில் வெளியிட்டு வினியோகஸ்தர்கள், தியேட்டர்காரர்களுக்குக் கொடுத்தது போக மீதமுள்ள தொகைதான் தயாரிப்பாளருக்குக் லாபமாகக் கிடைக்கும். டிஜிட்டல் வெளியீட்டில் அதெல்லாம் இல்லாததால் தயாரிப்பாளராக சல்மான் இந்தப் படத்தின் மூலம் நல்ல லாபம் பார்ப்பார் என்றுதான் பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.