பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் | 3 மணி நேரம் 40 நிமிடம் ஓடப் போகும் 'பாகுபலி தி எபிக்' |
தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ள ராஷ்மிகா மந்தனா தமிழில் கார்த்தியுடன் சுல்தான் படத்தில் நடித்துள்ளார். அடுத்து முன்னணி நடிகர்களின் பட வாய்ப்பு வந்து கொண்டிருந்த சமயத்தில் ஹிந்தியில் பட வாய்ப்பு வர அங்கு நடித்து வருகிறார். பாலிவுட்டில் சித்தார்த் மல்கோத்ராவுடன் இணைந்து மிஷன் மஜ்னு என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு லக்னோவில் நடைபெற்று வருகிறது. இதைத் தொடர்ந்து அமிதாப்பச்சனுடன் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்திற்கு டெட்லி என்று டைட்டில் வைத்திருந்த நிலையில் தற்போது குட்பாய் என்று மாற்றியுள்ளனர். ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியாக அமிதாப்பச்சன் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு, மும்பையில் போடப்பட்டுள்ள பிரமாண்ட செட்டில் மார்ச் 29ல் முதல் தொடங்குகிறது. விகாஷ் பஹல் இயக்குகிறார்.