ராம் பொத்தினேனி எழுதிய பாடலை பின்னணி பாடிய அனிருத் | 10 மில்லியன் வியூஸ் - தமன்னா சாதனையை முறியடிப்பாரா பூஜா ஹெக்டே | விக்னேஷ் சிவனை பிரிவதாக வதந்தி : போட்டோவால் பதில் சொன்ன நயன்தாரா | தமிழில் மீண்டும் நடிக்கும் அன்னா பென் | சூர்யா சேதுபதியின் வாழ்க்கையில் விளையாடாதீர்கள் : அனல் அரசு வேண்டுகோள் | பிளாஷ்பேக் : நயன்தாராவை கவர்ச்சி களத்தில் தள்ளிய 'கள்வனின் காதலி' | 'பெத்தி' படத்தில் சிவராஜ் குமார் முதல் பார்வை வெளியீடு | ‛பரியேறும் பெருமாள்' ஹிந்தி ரீ மேக்கான ‛தடக் 2' டிரைலர் வெளியீடு, ஆக., 1ல் ரிலீஸ் | சிவகார்த்திகேயன் 24வது படம் தள்ளிப்போகிறதா? | தனுஷ் 54வது படத்தில் இணைந்தது குறித்து பிரித்வி பாண்டியராஜன் நெகிழ்ச்சி! |
பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் இன்றைய தினம் தனது 80 ஆவது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். ஹிந்தி சினிமாவில், ஷாட் ஹிந்துஸ்தானி என்ற படத்தில் 1969ம் ஆண்டு அறிமுகமானவர் அமிதாப்பச்சன். அந்த முதல் படத்திலேயே அவர் நடிப்பிற்கு விருது கிடைத்தது. அதன் பிறகு ஆனந்த், பர்வானா, பியார் கி கஹானி என அடுத்தடுத்து பல ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நடிகரானார் அமிதாப்பச்சன். அதோடு தனது நடிப்புக்காக பத்மஸ்ரீ, பத்மபூஷண், பத்ம விபூஷண், தாதா சாகேப் பால்கே என ஏராளமான விருதுகளை பெற்றுள்ளார் அமிதாப்பச்சன்.
அது மட்டுமின்றி நடிகர், தயாரிப்பாளர், பாடகர், நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் என பல பரிமாணங்களில் தன்னை வெளிப்படுத்தி வருகிறார். இந்த நிலையில் அக்டோபர் 11ம் தேதியான இன்று தனது 80 ஆவது பிறந்த நாளை கொண்டாடி வரும் அமிதாப்பச்சனை திரையுலயினரும் ரசிகர்களும் வாழ்த்தி வருகிறார்கள். அதோடு நேற்று நள்ளிரவு 12 மணிக்கு மும்பையில் உள்ள தனது வீட்டின் முன்பு கூடிய ரசிகர்களை சந்தித்து தனது கைகளை அசைத்தார் அமிதாப்பச்சன். அப்போது ரசிகர்கள் அவருக்கு பிறந்தநாளை வாழ்த்துக்களை கூற அவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.