ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
ஹாலிவுட்டில் 2015ல் வெளியாகி வெற்றிபெற்ற படம் 'தி இன்டர்ன்'. ராபர்ட் டி நீரோ நடித்திருந்த இந்தப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட இருப்பதாக கடந்த வருடம் அறிவிப்பு வெளியானது. கதாநாயகி ஆனி ஹாத்வே கதாபாத்திரத்தில் தீபிகா படுகோனேவும் ராபர்ட் டி நீரோ கதாபாத்திரத்தில் ரிஷிகபூரும் நடிப்பதாக ஓப்பந்தம் செய்யப்படிருந்தனர். ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன் ரிஷி கபூர் மரணம் அடைந்தார்.
இந்நிலையில் ரிஷி கபூருக்கு பதிலாக அந்த கதாபாத்திரத்தில் அமிதாப் பச்சன் நடிக்க இருக்கிறார் என்கிற தகவல் வெளியாகி உள்ளது. அஷ்யூர் என்டர்டெய்ன்மென் நிறுவனமும் வார்னர் பிரதர்ஸ் நிறுவனமும் இணைந்து இந்தப்படத்தை தயாரிக்க உள்ளன. கொரோனா காலக்கட்டத்திலேயே தயாராகி இருக்க வேண்டிய படம் என்பதால், விரைவில் இந்தப்படத்தின் படப்பிடிப்பை துவங்க திட்டமிட்டுள்ளனராம்.