கூலி ஆயிரம் கோடி வசூலிக்குமா? | வெளியானது டியர் ஸ்டூடண்ட்ஸ் டீஸர் : ஆக்ஷனில் நயன்தாரா | 8 பெண் உறுப்பினர்கள் : பெண்கள் மயமான புதிய நடிகர் சங்கம் | நான் நாத்திகன் அல்ல; பகுத்தறிவாளன் : கமல் பேச்சு | இட்லி கடை பட டப்பிங் பணிகளை நிறைவு செய்த பார்த்திபன் | மதராஸி பட இசை வெளியீட்டு விழா எப்போது தெரியுமா? | பா.ஜ.,வில் சேர்ந்தது ஏன்?: நடிகை கஸ்தூரி விளக்கம் | மலையாள நடிகர் சங்கத்தின் முதல் பெண் தலைவரானார் ஸ்வேதா மேனன் | தெரியாமல் பேசிட்டேன் மன்னிச்சுடுங்க : மிருணாள் | அனிருத்துக்கு எப்போது திருமணம்? கிண்டலாக பதில் சொன்ன அவரின் தந்தை! |
கிரிக்கெட் வீரர்களைத் திருமணம் செய்து கொள்ளும் நடிகைகள் என்பது இந்தியாவில் அடிக்கடி நடக்கும் ஒன்று. அப்படியான திருமணங்கள் பல உண்டு. ஆனால், திருமணமே செய்து கொள்ளாமல் பரபரப்பாகப் பேசப்பட்ட ஜோடி ஹிந்தி நடிகை நீனா குப்தா, மேற்கிந்திய கிரிக்கெட் அணி வீரர் விவியன் ரிச்சர்ட்ஸ்.
பல வருடங்களுக்கு முன்பு விவியன் மீது ஆசைப்பட்டு அவரைக் காதலித்தார் நீனா. ஆனால், திருமணமே செய்து கொள்ளாமல் அவர் மூலம் பெண் குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்தார். தற்போது நீனாவின் மகள் மசாபா குப்தா டிசைனர் ஆக இருக்கிறார்.
சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் வலைத்தளத்தில் தனது ரசிகைகளுக்கு ஒரு வேண்டுகோள் வைத்துள்ளார் நீனா. “எனது மகள் திருமணமாகாத பெற்றோருக்குப் பிறந்த காரணத்தால் மிகவும் பாதிக்கப்பட்டாள். திருமணமான ஆண்கள் மீது காதல் கொள்ள வேண்டாம். இதற்கு முன்பு நான் அப்படிச் செய்து, அதனால் பாதிக்கப்பட்டேன். அதனால் தான் இதைப் பற்றி நான் சொல்கிறேன்,” என அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.
தற்போது 61 வயதாகும் நீனா குப்தா, 13 வருடங்களுக்கு முன்பு விவேக் மெஹ்ரா என்ற ஆடிட்டரைத் திருமணம் செய்து கொண்டார். தற்போதும் ஹிந்திப் படங்களில் நடித்து வருகிறார்.