தனுஷின் 'குபேரா' படத்தை 50 கோடிக்கு கைப்பற்றிய அமேசான் பிரைம்! | நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் சூர்யாவின் 'ரெட்ரோ' | 'கொம்பு சீவி' படத்திற்காக மதுரை வட்டார தமிழில் டப்பிங் பேசும் சண்முக பாண்டியன்! | விஜய்சேதுபதி நடித்துள்ள 'ஏஸ்' படத்தின் சென்சார் - ரன்னிங் டைம் வெளியானது! | ரவி மோகனிடம் மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் கேட்கும் ஆர்த்தி ரவி | ரோல் மாடலுக்கு முத்தமிட்டு, மண்டியிட்டு மரியாதை செலுத்திய அஜித் | 'விக்ரம் 63' படத்தின் கதாநாயகி யார்? | வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க சூரி என்ன சொன்னார் தெரியுமா? | இசையமைப்பாளர் சாம் சிஎஸ் மீது மோசடி புகார் | படப்பிடிப்பில் ராஷி கண்ணா காயம் |
பிரபல மலையாள நடிகரும் தற்போதைய மத்திய இணை அமைச்சருமான சுரேஷ்கோபி மலையாளத்தில் நடித்து வரும் படம் 'ஒத்தக்கொம்பன்'. இந்தப் படத்தை இயக்குனர் மேத்யூ தாமஸ் என்பவர் இயக்கி வருகிறார். வில்லனாக பாலிவுட் நடிகர் கபீர் துகான் சிங் நடித்து வருகிறார். சில வருடங்களுக்கு முன்பே இந்த படம் அறிவிக்கப்பட்டாலும் சுரேஷ்கோபியின் அரசியல் பயணம் காரணமாக படப்பிடிப்பு துவங்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற தொடங்கியது. தற்போது இந்த படத்தில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கேரளாவில் தொடுபுழா பகுதியில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் பிரபல மலையாள சீனியர் இயக்குனரான பத்ரனை அழைத்து வந்து இந்த படத்தில் ஒரு காட்சியை இயக்க வைத்திருக்கிறார் இயக்குனர் மேத்யூ தாமஸ். இதன் பின்னணியில் ஒரு சுவாரசியமான பிளாஸ்பேக்கும் இருக்கிறது. கடந்த 1995ல் மோகன்லால் நடிப்பில் வெளியான கல்ட் கிளாசிக் படமான 'ஸ்படிகம்' திரைப்படத்தை இயக்கியவர் தான் இயக்குனர் பத்ரன். அந்த படத்தின் படப்பிடிப்பு சங்கனாச்சேரி மார்க்கெட்டில் நடைபெற்ற போது சிறுவனாக இருந்து அதை வேடிக்கை பார்த்தவர் தான் இந்த மேத்யூ தாமஸ். அதன் பிறகு தான் அவருக்கு சினிமாவில் நுழைந்து இயக்குனராக வேண்டும் என்கிற எண்ணமே ஏற்பட்டதாம்.
அதனைத் தொடர்ந்து ஜானி ஆண்டனி, அமல் நீரத் உள்ளிட்ட சில இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய மேத்யூ தாமஸ் தற்போது சுரேஷ்கோபி நடித்துவரும் இந்த ஒத்தக்கொம்பன் படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். இந்த படப்பிடிப்பு நடைபெறும் தொடுபுழா பகுதியில் தான் தனது ஆதர்ச இயக்குனரான பத்ரன் வசிக்கிறார் என கேள்விப்பட்டு அவரை ஒத்தக்கொம்பன் படப்பிடிப்பு தளத்திற்கு அழைத்து வந்து சுரேஷ் கோபியும் கபீர் துகான் சிங்கும் மோதும் சண்டைக் காட்சியின் ஒரு ஷாட் ஒன்றை படமாக்க செய்து கவுரவித்து மகிழ்ந்திருக்கிறார் மேத்யூ தாமஸ். இந்த காட்சியை அவர் படமாக்கியதும் சுரேஷ்கோபி உள்ளிட்ட படக்குழுவினர் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.