ரசிகர்கள் 'இன்டலிஜென்ட்': சாய் பிரியா சர்டிபிகேட் | பிளாஷ்பேக்: ஒரு செல்லாத ரூபாயின் கதை தந்த யோசனை, என் எஸ் கிருஷ்ணனின் “பணம்” திரைப்படம் | தில்லானா மோகனாம்பாள், அவ்வை சண்முகி, ஜெயிலர் - ஞாயிறு திரைப்படங்கள் | கலைமாமணி விருது பெற்றனர் சாய் பல்லவி, அனிருத், விக்ரம் பிரபு | மீண்டும் தனுஷ் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் | டியூட் சமூகப் பிரச்னையை வெளிச்சம் போட்டு காட்டும் : சொல்கிறார் பிரதீப் ரங்கநாதன் | கமலுக்கு அடுத்து அழகான ஹீரோ ஹரிஷ் கல்யாண் தான் : சொல்கிறார் இயக்குனர் மிஷ்கின் | ரஜினியின் வேட்டையன் வெளியாகி ஓராண்டு நிறைவு : இயக்குனர் ஞானவேல் வெளியிட்ட பதிவு | கணவரின் ஆயுள் நீடிக்க காஜல் அகர்வால் கர்வா சவுத் பூஜை | பிளாஷ்பேக்: ரஜினி படத்தில் நடிக்க மறுத்த சிவாஜி |
மலையாள திரையுலகில் சீனியர் நடிகர்களில் ஒருவர் சுரேஷ்கோபி. சமீபகாலமாக அரசியலில் நுழைந்து பா.ஜ.,வில் இணைந்து எம்பி தேர்தலில் வெற்றிபெற்று தற்போது மத்திய இணை அமைச்சராகவும் பொறுப்பு வகித்து வருகிறார். இவரது மகன்கள் கோகுல் சுரேஷ் மற்றும் மாதவ் சுரேஷ். இதில் கோகுல் சுரேஷ் கடந்த சில வருடங்களாகவே நடித்து வருகிறார். சமீபத்தில் தான் மாதவ் சுரேஷ் ஒரு படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த நிலையில் மாதவ் சுரேஷ், கேரளாவில் பஸ் டிரைவர்களின் அதிவேக டிரைவிங் குறித்து கண்டிக்கும் விதமாக சோசியல் மீடியாவில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அவர் அதில் கூறும்போது, “சமீபத்தில் இரவு நேரம் நானும் என் சகோதரர் கோகுல் சுரேஷும் குருவாயூரில் இருந்து கொச்சிக்கு காரில் திரும்பி வந்து கொண்டிருந்தோம். அப்போது எதிர்புறமாக கேரள அரசு பேருந்து மற்றும் தனியார் பேருந்து இரண்டும் ஒன்றை ஒன்று முந்தும் விதமாக போட்டி போட்டுக் கொண்டு அதிவேகத்தில் வந்தன. நூலிழையில் எங்கள் கார் அந்த விபத்தில் இருந்து தப்பியது. இன்னும் ஒரு இன்ச் எங்கள் கார் நகர்ந்து இருந்தாலும் நாங்கள் அருகில் இருந்த மரத்தின் மீது மோதி மிகப்பெரிய விபத்தை சந்தித்திருப்போம்.
இதுபோன்று பஸ் டிரைவர்களின் அராஜகத்தை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒருவேளை அரசு இதுபோன்ற பேருந்து ஓட்டுநர்களை கட்டுப்படுத்த தவறினால் அல்லது இதே போன்ற விஷயம் திரும்பவும் நடந்தால், தயவுசெய்து எனக்கு முழு சுதந்திரம் கொடுத்து விடுங்கள்.. நான் அந்த டிரைவர்களின் பல்லை உடைப்பேன்.. வண்டி டயர்களை துவம்சம் செய்து விடுவேன்” என்று ஆவேசத்துடன் கூறியுள்ளார்.