சீதா மாதாவின் ஆசீர்வாதம் : சாய் பல்லவி மகிழ்ச்சி | பாலிவுட்டில் தென்னிந்திய நடிகர்களுக்கு மரியாதை இல்லையா : பிரியாமணி பதில் | 'பாபநாசம்' படத்தில் என் முதல் சாய்ஸ் ரஜினிதான்: ஜீத்து ஜோசப் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல் | தனுஷூக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே! | அஜித் பட ஹீரோயின் யார் | சினிமாவில் நடப்பதை மட்டும் பூதக் கண்ணாடி வச்சு பாக்காதீங்க : குஷ்பு காட்டம் | பழனி முருகன் கோவிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்த விக்னேஷ் சிவன் - நயன்தாரா | அர்ஜுன் தாஸ் குரலைப் பாராட்டிய பவன் கல்யாண் | சுதீப் 47 படத்தை இயக்கப் போகும் 'மேக்ஸ்' இயக்குனர் | புதிய சாதனை படைத்த 'ஹரிஹர வீரமல்லு' டிரைலர் |
பிரபல மலையாள சீனியர் நடிகரும் தற்போதைய மத்திய அமைச்சருமான சுரேஷ்கோபி சில வருடங்களுக்கு பிறகு மீண்டும் நடிப்பிற்கு திரும்பி நடித்துள்ள படம் 'ஜேஎஸ்கே (ஜானகி Vs ஸ்டேட் ஆப் கேரளா)'. இந்த படம் கடந்த ஜூன் 27ம் தேதி வெளியாக இருந்த நிலையில், சென்சார் அதிகாரிகள் இந்த படத்தின் டைட்டிலில் உள்ள ஜானகி என்கிற பெயரை நீக்குமாறு வலியுறுத்தியதால் குறிப்பிட்ட தேதியில் படம் வெளியாகாமல் போனது. மறு தணிக்கைக்கு படம் அனுப்பப்பட்டும் அங்கேயும் அதே காரணம் சொல்லப்பட்டு தணிக்கை சான்றிதழ் நிராகரிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மலையாள திரையுலகைச் சேர்ந்த பல சங்கங்கள் திருவனந்தபுரத்தில் உள்ள சென்சார் அலுவலகத்திற்கு நேரில் சென்று போராட்டம் மற்றும் பேரணி நடத்தி தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள். அதே சமயம் பலருக்கும் எழுந்த ஒரு கேள்வி, சென்சார் போர்டு என்பது மத்திய அரசின் கீழ் இயங்கும் ஒரு அமைப்பு. அப்படி இருக்கையில் மத்திய அமைச்சரான நடிகர் சுரேஷ்கோபியின் படத்திற்கு இப்படி ஒரு தடையை விதிப்பார்களா என்கிற சந்தேகம் எழுந்தது. அதேசமயம் சுரேஷ்கோபி பா.ஜ.,வை சேர்ந்தவர் என்பதால் ஆளும் கேரள அரசு இந்த படம் தங்களது அரசுக்கு எதிரான படம் என நினைத்து சென்சார் அதிகாரிகள் மூலமாக அவர் படத்திற்கு மறைமுகமாக தடை விதிக்கிறதோ என்கிற சந்தேகமும் ரசிகர்களுக்கு இருந்தது.
ஆனால் தற்போது கேரள கலாச்சார மற்றும் பண்பாட்டு துறை அமைச்சர் ஷாஜி செரியன் எழுப்பி உள்ள கேள்வியில், ''ஜானகி Vs ஸ்டேட் ஆப் கேரளா என்கிற டைட்டிலில் என்ன தவறை சென்சார் போர்டு அதிகாரிகள் கண்டார்கள் ? இவ்வாறு டைட்டில் மாற்றச் சொல்வது கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது. ஏற்றுக்கொள்ள முடியாதது. ஒரு மத்திய அமைச்சராக இருக்கும் சுரேஷ்கோபியின் படத்திற்கே இப்படி ஒரு தடையை ஏற்படுத்தினால் சாதாரண மனிதன் இதை எப்படி எதிர்கொள்வான்,'' என்கிற கேள்வியை எழுப்பி உள்ளார்.
இதன் மூலம் மாநில அரசு, சுரேஷ்கோபி பிரச்னையில் எந்தவித தடையும் ஏற்படுத்தவில்லை என்பதை அவர் தெளிவுபடுத்தியுள்ளார். இன்னொரு பக்கம் நீதிமன்றத்தில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஜானகி என்கிற டைட்டிலை வைப்பதில் எந்த பிரச்னையும் இல்லாத போது, யாரும் அது குறித்து வழக்கு தொடுக்காத போது சென்சார் அதிகாரிகள் இந்த படத்திற்கு சான்றிதழ் தர மறுப்பது ஏன் என்கிற கேள்விகளையும் எழுப்பி உள்ளனர்.
இப்படி மத்திய மாநில அரசுகளுக்கும் நீதிமன்றத்தின் கேள்விகளுக்கும் கட்டுப்படாத சென்சார் அதிகாரிகள் யாரை திருப்திப்படுத்துவதற்காக இந்த படத்திற்காக தடை விதிக்கும் வேலையில் இறங்கி உள்ளனர் என்கிற கேள்விதான் மலையாள ரசிகர்களிடம் ஒட்டுமொத்தமாக எழுந்துள்ளது.