எதிர்மறை விமர்சனம் எதிரொலி : விலாயத் புத்தா படத்தில் 15 நிமிட காட்சிகள் நீக்கம் | ஜோசப் ரீமேக்கை பார்க்காமலேயே தர்மேந்திரா மறைந்து விட்டார் : மலையாள இயக்குனர் வருத்தம் | ஆஸ்கர் நாமினேஷனில் 'மகா அவதார் நரசிம்மா' | நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவம் பொல்லாதது-க்கு பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை |

மலையாள திரையுலகில் மெகா ஸ்டார் என ரசிகர்களால் அழைக்கப்படும் மம்முட்டி தற்போதும் இளம் ஹீரோக்களைப் போல வருடத்திற்கு ஐந்து படங்களுக்கு குறையாமல் நடித்து வருகிறார். கிட்டத்தட்ட 72 வயதில் இளைஞரை போல் சுறுசுறுப்பாக வலம் வந்த மம்முட்டி, கடந்த சில நாட்களாக படப்பிடிப்புகளில் கலந்து கொள்ளாமல் ஓய்வெடுத்து வந்தார். ஏற்கனவே ஒரு முறை அவருக்கு கேன்சர் பாதிப்பு இருக்கிறது என்ற செய்தி பரவியது போல இந்த முறையும் அவரது உடல் நலம் பற்றி பல செய்திகள் சோசியல் மீடியாவில் வெளியாகின.
ஆனால் அவரது நண்பரும் ராஜ்யசபா எம்பியுமான ஜான் பிரிட்டாஸ் என்பவர் மம்முட்டிக்கு வழக்கமாக வயதானதால் ஏற்படும் சிறிய உடல் நலக்குறைவு தான் என்றும் அதனால் மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொண்டு வீட்டில் ஓய்வு பெற்று வருகிறார் என்றும் ஒரு தகவலை பகிர்ந்து கொண்டிருந்தார். இந்த நிலையில் மம்முட்டி தற்போது உடல் நலம் தேறி மீண்டும் மிடுக்குடன் சுறுசுறுப்பாக படப்பிடிப்புக்கு கிளம்புவதற்கு தயாராகிவிட்டார்.
அதை உறுதிப்படுத்தும் விதமாக அவர் சோபாவில் அமர்ந்து தனது மொபைல் போன் ஒன்றை தீவிரமாக பார்ப்பது போன்று ஒரு புகைப்படம் சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. எப்போதெல்லாம் அவருக்கு உடல்நிலை சரியில்லை என்று செய்தி வருகிறதோ அதன்பிறகு சில நாட்களிலேயே இப்படி ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ஐ அம் பேக் என்பதை சொல்லாமல் சொல்லி வருகிறார் மம்முட்டி. கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் நடித்து வந்த 'களம்காவல்' படத்தில் படப்பிடிப்பில் மீண்டும் கலந்து கொண்டு நடிக்க இருக்கிறார் மம்முட்டி.