2025 தீபாவளி : 3 இளம் ஹீரோக்களின் போட்டி | சல்மான் கான் கமெண்ட்டுக்கு பதிலளிப்பாரா ஏஆர் முருகதாஸ் ? | காதலரைக் கரம் பிடிக்க 15 வருடங்கள் காத்திருந்த கீர்த்தி சுரேஷ் | தமிழ் இயக்குனர்களைக் கவர்ந்த நாகார்ஜுனா 'ஹேர்ஸ்டைல்' | ஓடிடியில் நேரடி படங்கள், வெப் தொடர்கள் அறிவிப்பு | நடிப்பில் விக்ரமை வெல்ல தொடர்ந்து போராடுவேன்: துருவ் விக்ரம் | அம்மாவின் பச்சை நிற கண்ணை பெற்ற அழகான மகள்: அக்ஷராவுக்கு கமல் பிறந்த நாள் வாழ்த்து | பிளாஷ்பேக்: கதை நாயகனாக முதல் படத்தில் தோற்ற எஸ்.எஸ்.ராஜேந்திரன் | நாற்று நட்டேன், செங்கல் சூளையில் வேலை செய்தேன்: அனுபமா பரமேஸ்வரன் | 35 நாளில் முடிந்த 'டூரிஸ்ட் பேமிலி' அபிஷன் படம் |
கடந்த மாதம் கன்னட நடிகை ரன்யா ராவ் விமானம் மூலம் அடிக்கடி தங்க கடத்தலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான 'வாகா' படத்தில் கதாநாயகியாக நடித்தவர் இவர்தான். கர்நாடக டிஜிபி ஆன ராமச்சந்திர ராவ் என்பவரின் வளர்ப்பு மகள் தான் ரன்யா ராவ். பெங்களூருவில் இருந்து துபாய்க்கு சென்று அடிக்கடி தங்கம் கடத்தி வருவதை வாடிக்கையாக வைத்திருந்தார் ரன்யா ராவ். தற்போது அவர் சிறையில் அடைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இது குறித்த வழக்கு, சிறப்பு விசாரணை அதிகாரி கவுரவ் குப்தா என்பவர் தலைமையில் நடத்தப்பட்டு வந்தது. இந்த விசாரணையின் போது விமான நிலையத்திற்குள் பாதுகாப்பு சோதனைகள் ஏதுமின்றி தாராளமாக சென்று வருவதற்கு தனது தந்தையின் பெயரை ரன்யா ராவ் பயன்படுத்தினார் என்பது இந்த விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ரன்யா ராவ் அடிக்கடி தனது தந்தையின் போலீஸ் வாகனத்தை பயன்படுத்தி விமான நிலையத்திற்கு சென்றுள்ளார்.
தனது மகள் என்பதால் கெடுபிடிகள் காட்ட வேண்டாம் என்று ராமச்சந்திர ராவ் அங்குள்ள அதிகாரிகளுக்கு வாய்மொழியாக கூறியிருந்தார் என்றும் அதற்கான சிசிடிவி காட்சிகளும் உறுதிப்படுத்தியுள்ளன. ஆனால் ரன்யா ராவ் இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபட்டிருந்தார் என்பது தனக்குத் தெரியாது என்று வளர்ப்பு தந்தை டிஜிபி ராமச்சந்திரன் கூறியுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. இந்த அறிக்கையை தற்போது கர்நாடக முதல் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.