பிளாஷ்பேக் : ரீமேக்கில் தோல்வியடைந்த முதல் படம் | திடீர் நடிகையான தயாரிப்பாளர் | ஓடிடியில் நேரடியாக வெளியாகும் ஸ்மிருதி வெங்கட் படம் | சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற தமிழ் படம் | ‛டியூட்'-ல் இடம் பெற்ற ‛கருத்த மச்சானை' நீக்க நீதிமன்றம் உத்தரவு | புயல் மிரட்டும் வேளையிலும் இந்த வாரம் 12 படங்கள் ரிலீஸ் | சிரஞ்சீவி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்! | லாக் டவுன் டிரைலர் வெளியானது | நடிகைகள் அம்பிகா, ராதாவின் தாயார் காலமானார் | மலையாள சினிமாவில் முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் படம் |

நடிகர்கள் விஷால், விஜய் சேதுபதி ஆகிய இருவரும் சென்னை விமான நிலையத்தில் சந்தித்துள்ளார்கள். அப்போது தாங்கள் எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படத்தை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் விஷால். அதோடு, அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‛என்னுடைய நண்பரும் திறமையான நடிகருமான விஜய் சேதுபதியை சென்னை விமான நிலையத்தில் சந்தித்தேன். மிகவும் உற்சாகமாக காணப்பட்டார். நீண்ட நாட்களுக்கு பிறகு அவரை சந்தித்ததில் மகிழ்ச்சி. நாங்கள் சிறிது நேரமே சந்தித்துக் கொண்டாலும் அது மிகவும் சிறப்பான தருணங்கள். அவரது முயற்சிகளுக்கு எனது வாழ்த்துக்கள். கடவுள் அவரை ஆசீர்வதிக்கட்டும்' என்று அந்த பதிவில் தெரிவித்து இருக்கிறார் விஷால். இந்த புகைப்படமும், பதிவும் ஏராளமான லைக்ஸ் மற்றும் கமெண்ட்டுகளை பெற்று வருகிறது.




