மணிரத்னம் அடுத்த படம் குறித்து தகவல் இதோ | மலையாள ரீமேக் படத்தில் நடிக்கும் விமல் | மீண்டும் இணையும் எழில், விஷ்ணு விஷால் கூட்டணி | பால்டப்பாவை இயக்கும் விஜய் மில்டன் | சாய் தன்ஷிகாவை திருமணம் செய்கிறார் நடிகர் விஷால்.? | கடந்தவாரம் வெளியான படங்களுக்கு வரவேற்பு எப்படி | பிளாஷ்பேக்: பொன்விழா ஆண்டில் எம்ஜிஆர்.,ன் “நினைத்ததை முடிப்பவன்” | 'ஜெயிலர் 2' படப்பிடிப்பு தளத்தில் ரஜினியை சந்தித்த வீரதீர சூரன் வில்லன் நடிகர் | சூர்யா 46 இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார் | ஹைதராபாத்தில் நடந்த சூர்யாவின் அடுத்த பட பூஜை |
பிரபல பாலிவுட் இயக்குனர் சனோஜ் மிஸ்ரா. இவர் மீது டில்லியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் டில்லி போலீசில் பாலியல் புகார் கொடுத்துள்ளார். அவர் கொடுத்துள்ள புகார் மனுவில் "கடந்த 2020ம் ஆண்டு உத்தரபிரதேசத்தில் வசித்து வந்தபோது, டிக்டாக் மற்றும் சமூக வலைதளங்கள் மூலம் எனக்கு இயக்குனர் சனோஜ் மிஸ்ரா அறிமுகமானார். என்னிடம் பேசும்போது உனக்கு சினிமா வாய்ப்பு தருகிறேன் என்று கூறுவார்.
கடந்த 2021ம் ஆண்டு ஜூன் மாதம் சினிமா வாய்ப்பு தொடர்பாக ஜான்சிக்கு வந்து என்னை சந்தித்தார். என்னை ஒரு ரிசார்ட்டுக்கு அழைத்து சென்றார். அங்கு மயக்க மருந்து கலந்து கொடுத்து என்னை பாலியல் பலாத்காரம் செய்தார். அதை புகைப்படமாகவும் எடுத்துள்ளார். அந்த படங்களை காட்டி மிரட்டியே என்னை பலமுறை பாலாத்காரம் செய்துள்ளார் " என்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த புகார் தொடர்பாக டில்லி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனிடையே தனக்கு முன்ஜாமின் கேட்டு டில்லி ஐகோர்ட்டில் சனோஜ் மிஸ்ரா மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த நிலையில் அவர் தலைமறைவானார். அவரை தேடி வந்த போலீசார் நேற்று அவரை கைது செய்தனர்.
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் சமீபத்தில் நடந்த மகா கும்பமேளாவில் பாசி விற்பனைக்கு வந்த இளம் பெண் மோனலிசா சமூக வலைதளத்தில் வைரலானார். அவரை சினிமாவில் நடிக்க வைப்பதாக கூறி ஒப்பந்தம் செய்தவர்தான் இந்த சனோஜ் மிஸ்ரா.