சர்தார் 2 சண்டை காட்சியில் நடித்தபோது கார்த்திக்கு காயம் | ராஷ்மிகாவுக்கு பாடம் கற்பிக்க வேண்டும் : காங்கிரஸ் எம்எல்ஏ கொந்தளிப்பு | அல்லு அர்ஜுன் - அட்லீ படம் விரைவில் ஆரம்பம்? | அவசியம் வந்தால் நானே சொல்வேன் - மாதம்பட்டி ரங்கராஜ் | தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகும் டேவிட் வார்னர் | பிரியங்கா சோப்ராவின் 'தமிழன்' பட அனுபவம் பகிர்ந்த அம்மா | 'சப்தம்' படத்திற்கு இயக்குனர் ஷங்கர் பாராட்டு | யாரிடமும் உதவி கேட்காதீங்க : செல்வராகவன் | தாலாட்டுதே வானம்... என தாலாட்டி சென்ற ஜெயச்சந்திரனின் பிறந்தநாள் இன்று! | பாலா விழாவில் கலந்து கொள்ளாதது ஏன்? லைலா விளக்கம் |
தமிழில் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்து வெளியான படம் 'லவ் டுடே'. 5 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் 100 கோடி வரை வசூலித்து சாதனை செய்தது. இதன் காரணமாகவே அடுத்தபடியாக தொடர்ந்து அவர் ஹீரோவாக நடிக்க தொடங்கி விட்டார். இந்த நிலையில் இந்த 'லவ் டுடே' படத்தை ஹிந்தியில் 'லவ்யபா' என்ற பெயரில் ரீமேக் செய்தார்கள். அமீர்கானின் மகன் ஜுனைத்கான் மற்றும் ஸ்ரீதேவியின் இளைய மகள் குஷி கபூர் ஆகியோர் ஜோடி சேர்ந்து நடித்திருந்தார்கள். இந்த படம் கடந்த பிப்ரவரி 7ம் தேதி திரைக்கு வந்தது. ஆனால், 60 கோடி செலவு செய்து தயாரிக்கப்பட்ட இந்த படம் திரைக்கு வந்து பத்து நாட்களில் இதுவரை 6.8 கோடி மட்டுமே வசூலித்து படுதோல்வியை சந்தித்துள்ளது.