அவசியம் வந்தால் நானே சொல்வேன் - மாதம்பட்டி ரங்கராஜ் | தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகும் டேவிட் வார்னர் | பிரியங்கா சோப்ராவின் 'தமிழன்' பட அனுபவம் பகிர்ந்த அம்மா | 'சப்தம்' படத்திற்கு இயக்குனர் ஷங்கர் பாராட்டு | யாரிடமும் உதவி கேட்காதீங்க : செல்வராகவன் | தாலாட்டுதே வானம்... என தாலாட்டி சென்ற ஜெயச்சந்திரனின் பிறந்தநாள் இன்று! | பாலா விழாவில் கலந்து கொள்ளாதது ஏன்? லைலா விளக்கம் | போஸ்ட் புரொக்ஷன் ஸ்டூடியோ திறந்தார் ஏ.எல்.விஜய் | பிளாஷ்பேக் : வெளிமாநிலத்தில் வெள்ளி விழா கொண்டாடிய முதல் படம் | பிளாஷ்பேக் : 10 வருட இடைவெளியில் படமாக உருவான ஒரே கதை |
பாலிவுட்டின் பிரபல நடன இயக்குனர் பரா கான். அதன் பிறகு சல்மான் கானை வைத்து மெயின் ஹூன் நா, ஓம் சாந்தி ஓம் என தொடர்ந்து படங்களை இயக்கி இயக்குனராகவும் மாறியவர். மீண்டும் அடுத்ததாக ஷாருக்கானை வைத்து ஒரு படம் இயக்கும் வேலைகளில் ஈடுபட்டுள்ளார் பரா கான். அதேசமயம் தனியாக வீடியோ சேனல் ஒன்றையும் ஆரம்பித்து தனது அனுபவங்களை ரசிகர்களுடன் தொடர்ந்து பகிர்ந்து கொண்டு வருகிறார் பரா கான்.
அந்த வகையில் தற்போது புதிய வீடியோ ஒன்றில் பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவுடன் இணைந்து உணவு சமைக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த சமயத்தில் பரா கானின் வீட்டிற்கு சானியா மிர்சா தனது சகோதரி அனம் மற்றும் தனது மகன் இசான் ஆகியோருடன் விசிட் அடித்திருந்தார். இந்த வீடியோவில் இருவரும் தங்களுக்குள் நடந்த சில சுவாரசியமான அனுபவங்களையும் அதில் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
அப்போது பேசிய சானியா மிர்சா தனது மகன் பிறந்த போது தன்னை பார்க்க வந்த பரா கான், மகனின் கையில் பத்து ரூபாயை திணித்து வாழ்த்திவிட்டு உன்னுடைய மகனை நான் பின்னாளில் சினிமாவில் அறிமுகப்படுத்துவதற்கான அட்வான்ஸ் இது என்று கூறியதை ஞாபகப்படுத்தினார். ஆனால் அதை மறுத்த பரா கான் நான் 100 ரூபாய் தான் கொடுத்தேன் என்று கூறினார். இருந்தாலும் சானியா மிர்சா எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது நீங்கள் பத்து ரூபாய் தான் கொடுத்தீர்கள் என விடாப்பிடியாக கூறினார். இப்படி பல சுவாரசியங்களை இருவரும் பகிர்ந்து கொண்டனர்.