Advertisement

சிறப்புச்செய்திகள்

நான்காவது வாரத்தை கடந்து நான்-ஸ்டாப் ஆக ஓடும் 'அமரன்' | புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை தவிர்க்கும் பஹத் பாசில் ; இன்னொரு அஜித்தாக மாறுகிறாரா? | என் தந்தைக்கு ஏஐ குரல் வேண்டாம் ; எஸ்பிபி சரண் திட்டவட்டம் | மோகன்லாலின் 5 படங்களுக்கு மொத்தமாக ரிலீஸ் தேதி அறிவிப்பு | பாக்கியலெட்சுமி சீரியல் முடிவுக்கு வருகிறதா? | ‛அருண் தான் என் உலகம்' - மாற்றி மாற்றி பேசும் அர்ச்சனா | சீனாவில் விஜய் சேதுபதியின் 'மகராஜா' ரிலீஸ் : சிவகார்த்திகேயன் வாழ்த்து | கோவாவில் திருமணம் : திருப்பதியில் கீர்த்தி சுரேஷ் பேட்டி | பொங்கலுக்கு 'விடாமுயற்சி' : வேறு படங்கள் வெளிவருமா? | விஜய் - 69 : திடீரென வாங்கப்பட்ட 'பகவந்த் கேசரி' உரிமை ? |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

இந்த சமூகத்தில் வாழ்வதற்கே அருவருப்பாக இருக்கிறது: ஐஸ்வர்யாராய் வேதனை

16 ஜூலை, 2024 - 11:51 IST
எழுத்தின் அளவு:
Aishwarya-didn't-pose-with-Salman-at-Ambani-wedding,-edited-photo-viral


தொழில் அதிபர் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்ச்சென்ட் திருமணம் சமீபத்தில் நடந்தது. இந்த விழாவில் பாலிவுட் நட்சத்திரங்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். இதில் பங்குகொண்டவர்கள் தனித்தனியாக சென்று மணமக்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். சல்மான்கான், அர்பிதா கான் இணைந்து மணக்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். சில நிமிடங்களுக்கு பிறகு ஐஸ்வர்யாராய் மணமக்களுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். ஆனால் சல்மான்கானும், ஐஸ்வர்யாராயும் ஒன்றாக திருமண விழாவில் போட்டோவுக்கு போஸ் கொடுப்பது போன்று சித்தரித்து படம் வெளியானது.

முன்னாள் காதலன் சல்மான்கானுடன் நெருக்கம் காட்டும் ஐஸ்வர்யா என்பது மாதிரியான செய்திகள் இந்த போலி படத்துடன் வெளியானது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஐஸ்வர்யாராய் இது பற்றி கூறுகையில், ‛‛எல்லாவற்றுக்கும் ஒரு எல்லை இருக்கிறது. திருமணமான ஒரு பெண்ணை அதுவும் ஒரு பெண்ணுக்கு தாயான ஒரு பெண்ணைபற்றி இப்படியா பேசுவது.. புரளியை கிளப்பும் இந்த சமூகத்தில் வாழ்வதற்கே அருவருப்பாக உள்ளது,'' என்று கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
‛வாழும்கலை' ரவி சங்கர் வாழ்க்கை சினிமா ஆகிறது‛வாழும்கலை' ரவி சங்கர் வாழ்க்கை ... 'பிளாஸ்டிக்' கமென்ட்: ஐஸ்வர்யா ராயிடம் மன்னிப்பு கேட்ட இம்ரான் ஹாஷ்மி 'பிளாஸ்டிக்' கமென்ட்: ஐஸ்வர்யா ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)