லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
மும்பை: மஹாராஷ்டிராவின் மும்பையில் பாலிவுட் நடிகை ரவீணா டாண்டன்(49) கடந்த 1ம் தேதி நள்ளிரவு பார்ட்டி ஒன்றில் பங்கேற்று விட்டு காரில் வந்து கொண்டிருந்தார். மும்பையின் கார்ட்டர் சாலை பகுதி அருகே கார் வந்த போது, சாலையை கடக்க முயன்ற மூன்று பெண்கள் மீது மோதியது. இதில், அந்தப் பெண்கள் காயம் அடைந்தனர்.
காரை ஓட்டிய டிரைவர் காரில் இருந்து இறங்கி வந்து, சாலையை கடக்க முயன்ற பெண்களுடன் தகராறு செய்தார். மேலும் அவர், அவர்களை பிடித்து கீழே தள்ளியதாகக் கூறப்படுகிறது.
காரில் இருந்து இறங்கிய நடிகை ரவீணா டாண்டனும், டிரைவருடன் சேர்ந்து, சாலையை கடக்க முயன்ற பெண்களை தாக்கியதாகக் கூறப்படுகிறது. அப்போது அவர் மது போதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, அப்பகுதியில் உள்ளூர் மக்கள் திரண்டனர். இந்த சம்பவத்தை, அவர்களில் சிலர் மொபைல் போனில் வீடியோ எடுத்தனர். கோபத்தில், உள்ளூர் மக்கள் சிலர் நடிகை ரவீணாவை தாக்கினர்.
உடனே, 'தயவு செய்து என்னை அடிக்காதீர்கள்; என்னை தள்ளாதீர்கள்' என, அவர் கெஞ்சினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.