ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் | நிவேதா பெத்துராஜுக்கு திருமணம் | 'திரெளபதி' இரண்டாம் பாகத்தில் சரித்திர கதை | பிளாஷ்பேக் : காமெடி நாயகனாக விஜயகாந்த் நடித்த படம் | சிரிப்பு சத்தம், காமெடி பஞ்சத்தில் தவிக்கும் தமிழ் சினிமா | பிளாஷ்பேக் : உலகம் முழுக்க வெற்றி பெற்று தமிழில் தோற்ற கதை | ‛பெத்தி' பட பாடலுக்கு ஆயிரம் பேருடன் நடனமாடிய ராம்சரண் | தீபாவளி போட்டியில் டீசல் : ஆக்ஷன் ஹீரோவாக ஹரிஷ் கல்யாண் |
மலையாள திரையுலகில் இருந்து தமிழுக்கு வந்தவர் நடிகை சம்யுக்தா (மேனன்). கடந்த வருடம் வெளியான 'வாத்தி' படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்ததுடன், அந்தப்படத்தில் ஹிட்டான 'அடியாத்தி இது என்ன' என்கிற ஒரே பாடலில் பட்டிதொட்டி எல்லாம் பிரபலமானார். அதுமட்டுமல்ல தனது பெயரில் உள்ள மேனன் என்கிற ஜாதி பெயரை தான் நீக்கி விட்டதாகவும் தன்னை சம்யுக்தா என்றே அழையுங்கள் என்றும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
தெலுங்கில் அவருக்கு அதிக அளவில் வரவேற்பு இருந்து வரும் நிலையில் தற்போது முதல் முறையாக பாலிவுட்டிலும் அடியெடுத்து வைத்துள்ளார் சம்யுக்தா. தெலுங்கு திரையுலகைச் சேர்ந்த சரண் தேஜ் என்கிற இயக்குனர் ஹிந்தியில் இயக்கும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் சம்யுக்தா. இந்த படத்தில் தான் 27 வருடங்களுக்கு பிறகு பிரபுதேவாவும் கஜோலும் மீண்டும் இணைந்து நடிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.