படப்பிடிப்புக்காக ஹனிமூனை மாற்றிய ஹீரோ | மதம் மாறிவிட்டேனா: பாடகர் மனோ சொன்ன பதில் | ஏவிஎம் நிறுவனம் படம் தயாரிப்பதை நிறுத்தியது ஏன்? இயக்குனர் எஸ்.பி முத்துராமன் | ரஜினிகாந்த், கமல்ஹாசன் இணையும் படம்: வடிவேலு காமெடி பண்ணுகிறாரா? | பிளாஷ்பேக் : விக்ரமை எதிர்த்து நின்று வெற்றி பெற்ற 'பூக்களை பறிக்காதீர்கள்' | பிளாஷ்பேக் : தமிழில் திரைப்படமான மலையாள நாடகம் | மீண்டும் ஒரு ராணுவ படத்திற்காக இணையும் மோகன்லால்-மேஜர் ரவி கூட்டணி | ஹிந்தியில் படம் தயாரிக்கும் நடிகர் ராணா | ரஜினி படத்தை தயாரிக்கும் கமல்: சுந்தர் சி இயக்குகிறார் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது | 'பராசக்தி' படம் என் மீதான கவர்ச்சி பிம்பத்தை மாற்றும்! -ஸ்ரீ லீலா நம்பிக்கை |

'சக்திமான்', 'தியா அவுர் பாதி ஹம்' உள்ளிட்ட பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்தவர் நூபுர் அலங்கார். பல பாலிவுட் திரைப்படங்களில் வில்லி மற்றும் குணசித்ர வேடங்களிலும் நடித்துள்ளார். கடந்த 25 வருடங்களுக்கு மேலாக நடித்து வரும் இவர் கடந்த 2019ம் ஆண்டு நடந்த பிஎம்சி வங்கி மோசடியில் பணம் முழுவதையும் இழந்தார்.
பிறகு ஆதரவாக இருந்த தாய், சகோதரி இறந்த விட்டதால் அவருக்கு வாழ்க்கை மீது அதீத வெறுப்பு ஏற்பட்டது. இதனால் தனது நடிப்பு மற்றும் ஆடம்பர வாழ்க்கையை துறந்து சாமியாராகிவிட்டார்.
தற்போது 'பீதாம்பரா மா' என்ற ஆன்மிக பெயருடன் இமயமலையில் வசித்து வருகிறார். அங்கு மிகவும் குறைந்த உடைகளுடன் எளிய வாழ்க்கையை மேற்கொண்டு வருகிறார். பிச்சை எடுத்து சாப்பிட்டு குகைகளிலும், தொலைதூர கிராம பகுதிகளிலும் வசித்து வருகிறார்.
"உலக வாழ்க்கையின் அழுத்தங்கள், செலவினங்கள் போன்ற கவலைகளின்றி நான் மிகவும் நிம்மதியாக வாழ்கிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.