'கூலி, 45' ; ஒரேநாளில் வெளியாகும் உபேந்திராவின் 2 படங்கள் | நடிகை ஜனனி திருமண நிச்சயதார்த்தம் ; விமான பைலட்டை மணக்கிறார் | விஜய் டிவி பிரியங்கா 2வது திருமணம் : மாப்பிள்ளை யார் தெரியுமா...! | பாலோயர்ஸ்: உண்மையைப் பேசியுள்ள பூஜா ஹெக்டே | ரீ-ரிலீஸில் வரவேற்பைப் பெறுமா 'சச்சின்' | நஷ்டஈடு கேட்டு இளையராஜா நோட்டீஸ்: 'குட் பேட் அக்லி' தயாரிப்பாளர் விளக்கம் | ஓடிடி.,யிலும் தோல்வியடைந்த யுவன் ஷங்கர் ராஜா படம் | ஓடிடி-யில் வெளியாகும் வரலக்ஷ்மி சரத்குமாரின் திரில்லர் படம் | கூலி படத்தில் ரஜினி உடன் நடித்தது ஸ்பெஷலான அனுபவம் : பூஜா ஹெக்டே | அரசியலுக்கு வர வாய்ப்புள்ளதா? : ரவி மோகன் கொடுத்த பதில் |
'தாம் தூம், தலைவி, சந்திரமுகி 2' உள்ளிட்ட தமிழ்ப் படங்களில் நடித்தவரும், பாலிவுட்டின் முன்னணி கதாநாயகிகளிலும் ஒருவர் கங்கனா ரணாவத். லோக்சபா தேர்தலில் பா.ஜ., சார்பில் ஹிமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அவரது சொந்த தொகுதியான மாண்டி தொகுதியில் போட்டியிடுகிறார். அதற்காக அவர் தாக்கல் செய்துள்ள வேட்பு மனுவில் தனது சொத்து விவரங்களைக் குறிப்பிட்டுள்ளார்.
கங்கனாவின் மொத்த சொத்து மதிப்பு 91 கோடி ரூபாய். அதில் அசையும் சொத்துகள் 28.7 கோடி, அசையா சொத்துகள் 62.9 கோடி. அதே சமயம் 17.38 கோடி ரூபாய்க்கு தனக்கு கடன் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
3.91 கோடி மதிப்புள்ள ஒரு பி.எம்.டபிள்யு, இரண்டு மெர்சிடிஸ் பென்ஸ் கார்களை வைத்துள்ளார். 21 லட்சத்திற்கு ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்துள்ளார். 5 கோடி மதிப்பிற்கு தங்கம், 50 லட்ச ரூபாய் மதிப்பில் 60 கிலோ வெள்ளி, 3 கோடி மதிப்பில் 14 கேரட் வைர நகைகள், மும்பை பாந்த்ரா, சண்டிகர் சிர்காபுர், மணாலி ஆகிய இடங்களில் வீடுகள் இருக்கிறது. பாந்த்ரா அபார்ட்மென்டின் மதிப்பு 23.98 கோடி, மணாலி வீட்டின் மதிப்பு 4.97 கோடி.
இத்துடன் தன் மீது 8 கிரிமினல் வழக்குகள் இருப்பதாகவும், அதில் 3 வழக்குகள் மத உணர்வுகளுக்கு எதிராக கருத்து தெரிவித்ததாக பதியப்பட்டவை என்றும் குறிப்பிட்டுள்ளார். 50 எல்ஐசி பாலிசி வைத்துள்ளதாகவும், சண்டிகரில் உள்ள பள்ளியில் 12ம் வகுப்பு முடித்துள்ளதாகவும் அவரது அபிடவிட்டில் குறிப்பிட்டுள்ளார்.
கங்கனா போட்டியிடும் மாண்டி தொகுதியில் ஜுன் 1ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. “பாலிவுட்டில் வெற்றி பெற்றது போலவே அரசியலிலும் வெற்றி பெறுவேன் என நம்புகிறேன்,” என வேட்பு மனு தாக்கல் முடிந்த பின் தெரிவித்துள்ளார்.