ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
நடிகர் யோகி பாபு தமிழில் ரஜினி, விஜய், அஜித், சூர்யா, தனுஷ் என பல முன்னனி நடிகர்களின் படங்களில் நகைச்சுவை நடிகராக பல ஆண்டுகளாக கலக்கி வருகிறார். சமீபகாலமாக தமிழில் கதையின் நாயகனாக நடித்து வருகிறார். தமிழைத் தொடர்ந்து தெலுங்கில் பிரபாஸ் நடித்து வரும் 'ராஜா சாப்' படத்தின் மூலம் யோகி பாபு தெலுங்கில் சினிமாவில் அறிமுகமாகிறார். இதுதவிர மலையாளத்திலும் நடிப்பவர் ஏற்கனவே ஹிந்தியிலும் ஓரிரு படங்களில் சிறிய ரோலில் நடித்துள்ளார். இப்போது பாலிவுட் இயக்குனர் அனிஸ் பாஸ்மி இயக்கத்தில் உருவாகும் புதிய ஹாரர் த்ரில்லர் படத்தில் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இவரது இயக்கத்தில் ஹிந்தியில் கடைசியாக வெளிவந்த 'புல் புல்லையா 2' படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.