ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
'பாகுபலி' படங்களுக்குப் பிறகு சரித்திரக் கதைகள் மீதான ஆர்வம் ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது. தமிழில் 'பொன்னியின் செல்வன்' படமும் வெளிவந்தது.
இந்நிலையில் இதிகாசங்களான ராமாயணம், மகாபாரதம் ஆகியவற்றை பிரம்மாண்டப் படங்களாகத் தயாரிக்க சிலர் முயற்சித்து வருகிறார்கள். பாலிவுட்டின் பிரபல இயக்குனரான நிதிஷ் திவாரி 'ராமாயணம்' படத்தை இயக்க உள்ளார்.
அடுத்த மாதம் ஏப்ரல் 17ம் தேதி ராம நவமி அன்று இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது. இப்படத்தில் ராமர் கதாபாத்திரத்தில் ரன்பீர் கபீர், சீதையாக சாய் பல்லவி நடிக்கப் போகிறார் என்று ஏற்கெனவே செய்திகள் வெளியாகி உள்ளது.
ராவணன் கதாபாத்திரத்தில் கன்னட நடிகர் யஷ், அனுமான் கதாபாத்திரத்தில் சன்னி தியோல், கும்பகர்ணன் கதாபாத்திரத்தில் பாபி தியோல், சூர்ப்பனகை கதாபாத்திரத்தில் ரகுல் ப்ரீத் சிங், கைகேயி கதாபாத்திரத்தில் லாரா தத்தா நடிக்கப் போவதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
ராமாணயத்தை மையமாக வைத்து இதற்கு முன் சில மொழிகளில் படங்கள் வந்துள்ளன. புதிதாக உருவாக உள்ள இந்த ராமாயணப் படம் இதுவரை இல்லாத அளவிற்கு மிக பிரம்மாண்டமாக உருவாகும் எனத் தெரிகிறது.