ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

ஆதித்யா ஜம்பாலே இயக்கத்தில் யாமி கவுதம், பிரியாமணி நடித்துள்ள 'ஆர்டிக்கிள் 370' படம் கடந்த 23ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதற்காக ஏற்படுத்தப்பட்ட சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதன் பின்னணியில் இந்த படம் உருவாகி உள்ளது. ஒரு தரப்பினரின் கடும் விமர்சனத்தை எதிர்கொண்டாலும், வசூல் ரீதியாக உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் வரவேற்பைப் பெற்று வருகிறது. படம் அரபு நாடுகளில் தடை செய்யப்பட்டு இருக்கிறது.
"இந்த படம் விழிப்புணர்வு படம் தானே தவிர விவாத படம் அல்ல" என்று பிரியாமணி கூறியுள்ளார். மேலும் அவர் கூறும்போது, “ஒரு பிரிவினர் இப்படத்தை பிரச்சாரப் படம் என்று கூறுகின்றனர். இது ஒரு விழிப்புணர்வுப் படம். இந்த கதைகள் மக்களுக்கு சொல்லப்பட வேண்டும். இப்படத்தை நாங்கள் கையில் எடுக்கும்போது, மக்களில் பலபேருக்கு தெரியாத இதுபோன்ற ஒரு வரலாற்று நிகழ்வை அவர்களிடம் கொண்டு போய் சேர்ப்பதே எங்களுடைய பிரதான நோக்கமாக இருந்தது. இப்படத்தில் காட்டப்பட்ட அனைத்தும் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டவை” என்றார்.