ஓங்கி குத்த வேண்டும் : விஜய் பேச்சால் நடிகர் ரஞ்சித் ஆவேசம் | ரூ. 300 கோடி வசூல் சாதனை படைத்த மகாவதார் நரசிம்மா | அறிவழகன் இயக்கத்தில் அதிதி ஷங்கர் | மிஷ்கின் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் | நடிகர்களுக்கு எதிராக செய்யப்படும் 'பெய்டு விமர்சனம்' : தமிழ் சினிமாவில் புதிய சர்ச்சை...! | போன வாரம் புடவையில், இந்த வாரம் பிகினியில்… | நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் ரைட் | பிணமாக நடித்துள்ள காளி வெங்கட் : அது பெரிய பாக்கியம் என்கிறார் | விஷால் வீட்டில் 4வது காதல் திருமணம் | ‛சின்ன பாப்பா பெரிய பாப்பா' புகழ் இயக்குனர் எஸ்என் சக்திவேல் காலமானார் |
மலையாளத் திரையுலகை சேர்ந்த ஒளிப்பதிவாளர் ஜோமான் டி ஜான், சசிகுமார் நடித்த பிரம்மன் படம் மூலமாக தமிழில் நுழைந்தவர். அதன் பிறகு தமிழ், மலையாளம் மட்டுமல்ல ஹிந்தியிலும் இவர் மோஸ்ட் வான்டெட் ஒளிப்பதிவாளராக மாறிவிட்டார், கவுதம் மேனன் இயக்கிய என்னை நோக்கி பாயும் தோட்டா மற்றும் விரைவில் வெளியாக இருக்கும் துருவ நட்சத்திரம் படங்களிலும் பணியாற்றிய இவர். பாலிவுட்டில் சூர்யவன்சி, சர்க்கஸ் உள்ளிட்ட படங்களில் பணியாற்றியவர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அனுஷ்கா நடிப்பில் தெலுங்கில் வெளியான மிஸ் ஷெட்டி மிஸஸ் பாலிஷெட்டி படத்திற்கும் இவர்தான் ஒளிப்பதிவு செய்தவர்.
இந்த நிலையில் தற்போது அனுஷா எல்ஸா வர்கீஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார் ஜோமோன் டி ஜான். இவர்களது திருமணம் கேரளாவில் உள்ள குமரகோம் பகுதியில் நடைபெற்றது. ஜோமோனுக்கு பிரபலங்களான பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங், நடிகை கீர்த்தி ஷெட்டி உள்ளிட்டோர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
கடந்த 2014ல் மலையாள நடிகையான ஆன் அகஸ்டின் என்பவரை நீண்ட நாட்களாக காதலித்து திருமணம் செய்து கொண்டார் ஜோமோன் டி ஜான். ஆனால் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் 2020ல் இருவரும் விவாகரத்து செய்து பிரிந்தனர். இந்த நிலையில் தான் தற்போது மறுமணம் செய்து கொண்டுள்ளார் ஜோமோன் டி ஜான்.