நாக சைதன்யாவின் புதிய பட டைட்டிலை அறிவித்த மகேஷ்பாபு | இ.வி.கணேஷ்பாபுவின் 'ஆநிரை' குறும்படத்திற்கு கோவா திரைப்பட விழாவில் பாராட்டு | பிரித்விராஜ் படத்தை ஓவர்டேக் செய்யும் சிறிய நடிகரின் படம் | சிறையில் இருக்கும் நிலையில் நடிகர் தர்ஷினின் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு | கில்லி பாணியில் அடுத்த படத்தை இயக்கும் கீர்த்தீஸ்வரன் | 'திரெளபதி 2' படத்தில் ரக்ஷனாவின் பர்ஸ்ட் லுக் வெளியீடு | ஜிம்மில் பீஸ்ட் மோடில் எடுத்த புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா | நடிகர் அஜித்துக்கு 'ஜென்டில்மேன் டிரைவர்' விருது | பிப்ரவரியில் அஜித் படம் தொடங்குகிறது : ஆதிக் ரவிச்சந்திரன் சொன்ன புது தகவல் | நீங்க ஹீரோ ஆக வேணாம்னு சொன்னாரு : பார்க்கிங் தயாரிப்பாளரை கலாய்த்த சிவகார்த்திகேயன் |

சென்னையில் தனியார் கல்லுாரியில் நடந்த மதராஸி பாடல் வெளியீட்டு விழாவில் மனைவி, மகன், மகள் என குடும்பத்துடன் கலந்துகொண்டார் ஏ.ஆர்.முருகதாஸ். அதேபோல் ஹீரோ சிவகார்த்திகேயனும் தனது குடும்பத்தை அழைத்து வந்து இருந்தார்.
விழாவில் முருகதாஸ் பேசுகையில் ''இந்த படத்தில் இசையமைப்பாளர் அனிருத்தின் பங்களிப்பு மிகவும் பெரியது, இதில் அனிருத்னு இன்னொரு ஹீரோனு சொல்லலாம். நான் சோர்வாக இருக்கும்போது விக்ரம் படத்தோட பின்னணி இசையை கேட்பேன். விஜய்யுடன் வேலை பார்க்கும்போது, அவர்கிட்ட இருந்து டயலாக் வேற மாதிரி கிடைக்கும், அதே மாதிரிதான் அனிருத் தனித்தன்மையானவர். ஹீரோ தவிர ஹீரோயினாக நடித்த ருக்மிணி மற்றும் பிஜூ மேனன் கதைக்கு உயிர் கொடுத்திருக்காங்க. அய்யப்பனும் கோஷியும் படத்தை பார்த்த பிறகுதான் பிஜூ மேனனை ஒப்பந்தம் செய்தேன்.
12 உதவி இயக்குனர்கள் பங்கும் முக்கியானது, குறிப்பாக ஒளிப்பதிவாளர் உழைப்பு அபாரமானது. இலங்கையில் படப்பிடிப்பை நடத்தியபோது, பயங்கரமான புயல் வீசியது. அப்போது, ஒரு காட்சிக்காக உயரமான இடத்தில் இருந்து சிவகார்த்திகேயன் குதிக்கும்போது, அவரைவிட உயரமாக நின்றிருந்த ஒளிப்பதிவாளர், புயல் காற்றால் ட்ரோன் கேமரா யார் மீதும் மோதிவிடக் கூடாது என்று ஓடிப் போய் அதைப் பிடித்தார். அப்போது பிளேடு அவரது கையில் பட்டு விரல் தனியாக வந்துவிட்டது. நாங்கள் ஓடிப் போய் அவரது விரலைத் தேடிக் கண்டுபிடித்துக் கொடுத்தோம். விரலைச் சேர்த்த பிறகு, அடுத்த நாளே அவர் மீண்டும் படப்பிடிப்புக்கு வந்துவிட்டார். மதராஸி நல்ல கமர்ஷியல் படமாக இருக்கும் என்றார்.