குட் பேட் அக்லி படத்திற்காக அனிருத் பாடிய முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | பாரபட்சம் காட்டுவது வருத்தமாக உள்ளது : ஜோதிகா | ரீ-ரிலீஸ் ஆகும் தனுஷின் பொல்லாதவன் | சிம்பு 51வது பட அப்டேட் தந்த அஷ்வத் மாரிமுத்து | 'லால் சலாம்' ஓடிடி ரிலீஸ் எப்போது? | தனுஷ் 55வது படத்தின் படப்பிடிப்பு எப்போது? | இறுதிக்கட்டத்தில் ‛7ஜி ரெயின்போ காலனி 2' | பாலா செய்த அதே தவறைச் செய்கிறாரா வெற்றிமாறன்? | பெண் தொழில்நுட்ப கலைஞர்கள் மட்டுமே பணியாற்றியுள்ள முதல் மலையாள படம் 'மும்தா' | ஸ்வீட் ஹார்ட் : விஜய்யை புகழும் வில்லன் பாபி தியோல் |
இஸ்ரேல் மீது பாலஸ்தீனிய பயங்கரவாத அமைப்பான ஹமாஸ் நடத்திய தாக்குதலில் ஏராளமான இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் பல இஸ்ரேலியர்களை ஹமாஸ் அமைப்பினர் கடத்திக் கொண்டு தங்கள் ஆக்கிரமிப்பு பகுதியான காசா பகுதிக்குள் சென்றதாக கூறப்படுகிறது. இதனால் அதிகாரப்பூர்வமாக போரை அறிவித்துள்ள இஸ்ரேல், ஹமாஸ் ஆக்கிரமிப்பு பகுதிகளில் தாக்குதலை நடத்தி வருகிறது.
இந்நிலையில் போர் நடந்து வரும் இஸ்ரேலில் பிரபல ஹிந்தி நடிகை நுஸ்ரத் பாருச்சா சிக்கிக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஹிந்தியில் பல படங்களில் நடித்துள்ள அவர் இஸ்ரேலில் நடைபெற்ற ஹய்பா சர்வதேச திரைப்பட விழாவிற்கு சென்றுள்ளார். கடைசியாக அவரிடம் நேற்று மதியம் 12:30 மணி அளவில் பேசியதாக கூறப்படும் நிலையில், அவரை தொடர்புகொள்ள முடியவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.இந்த சம்பவம் பாலிவுட் வட்டாரத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.