பிளாஷ்பேக் : மின்னி விலகிய வரதன் | வட சென்னையில் இரண்டு தியேட்டர்கள் நிரந்தர மூடல் | இன்னமும் இறுதி ஆகாத 'இளையராஜா' பயோபிக் | விஜய்யின் 'ஜனநாயகன்' படத்தில் கேமியோ ரோலில் நடிக்கும் மூன்று இளம் இயக்குனர்கள்! | குட் பேட் அக்லி படத்திற்காக அனிருத் பாடிய முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | பாரபட்சம் காட்டுவது வருத்தமாக உள்ளது : ஜோதிகா | ரீ-ரிலீஸ் ஆகும் தனுஷின் பொல்லாதவன் | சிம்பு 51வது பட அப்டேட் தந்த அஷ்வத் மாரிமுத்து | 'லால் சலாம்' ஓடிடி ரிலீஸ் எப்போது? | தனுஷ் 55வது படத்தின் படப்பிடிப்பு எப்போது? |
இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தில் செயல்பட்டு வரும் ஹமாஸ் பயங்கரவாத குழு நடத்திய திடீர் ஏவுகணை தாக்குதலால் இஸ்ரேலில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த ஏவுகணை தாக்குதலில் ஆயிரக்கணக்கான மக்களும், நூற்றுக்கணக்கான ராணுவத்தினரும் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், பாலிவுட் நடிகை நஸ்ரத் பரூச்சா இஸ்ரேலில் சிக்கியுள்ளார் என தகவல் வெளியானது. என்னை சுற்றி போர் நடக்கிறது. நான் பத்திரமாக இருக்கிறேன் என்று அவரும் தகவல் அனுப்பினார். நஸ்ரத் பரூச்சாவை பத்திரமாக மீட்டு இந்தியா கொண்டுவர தேவையான நடவடிக்கைகளை அவரது உறவினர்களும், நண்பர்களும் மேற்கொண்டு மத்திய அரசின் உதவியையும் நாடினர்.
இந்நிலையில், நஸ்ரத் பரூச்சா மிகவும் பாதுகாப்பாக இருக்கிறார் என்றும், இஸ்ரேல் பகுதியில் இருந்து வெளியேற அங்குள்ள விமான நிலையத்தை நஸ்ரத் பரூச்சா அடைந்துள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டது. விமானத்தில் அவர் மும்பை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. தூதரகத்தின் உதவியுடன் நஸ்ரத் பரூச்சா அவரது வீட்டுக்குப் பாதுகாப்பாக அழைத்து வரப்படுவார் என்றும் கூறப்பட்டது. பாதுகாப்பு காரணங்களுக்காக அவர் தங்கி இருக்கும் இடத்தைப் பற்றிய விவரங்களை வெளியிடவில்லை. இந்நிலையில், நேற்று அவர் பத்திரமாக நாடு திரும்பினார். மும்பை விமான நிலையத்திலிருந்து பலத்த பாதுகாப்புடன் வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.