காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் | 3டியில் வெளியாகும் பான் இந்தியா சூப்பர் ஹீரோ படம் | பிளாஷ்பேக்: முதல் 'பார்ட் 2' படம் |
துபாயை தலைமையிடாக கொண்டு செயல்பட்டு வந்த ஒரு சூதாட்ட ஆப் நிறுவனம் பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறையின் வழக்கு பதிவு செய்துள்ளனர். அந்த நிறுவனத்தின் 417 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை கைப்பற்றி உள்ளது. இந்த செயலியை விளம்பர படுத்துவதற்காக பாலிவுட் நடிகர், நடிகைகள் கோடி கணக்கில பணம் பெற்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அவர் ஆஜராவத்தற்கு கால அவகாசம் கேட்டுள்ளார். அதேபோன்று நேற்று பாலிவுட் நடிகைகள் ஷ்ரத்தா கபூர், ஹூமா குரேஷி, ஹினா கான் ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை முன்பாக ஆஜராகி, சூதாட்ட செயலியை விளம்பரம் செய்வதற்காக பெற்ற பணம் குறித்த விவரங்களையும், அதற்கான ஆவணங்களையும் நடிகைகள் சமர்ப்பிக்க வேண்டும் என்று சம்மனில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.