'மணி ஹெய்ஸ்ட்' பாதிப்பில் உருவானது கேங்கர்ஸ்: சுந்தர்.சி | பிளாஷ்பேக்: 100 படங்களுக்கு மேல் குழந்தை நட்சத்திரமாக நடித்த சுலக்ஷனா | பிளாஷ்பேக்: குருவாயூரப்பனை எழுப்பும் லீலாவின் குரல் | அஜித்திற்கு எப்போதும் நன்றிக்கடன் பட்டுள்ளேன் : ஆதிக் ரவிச்சந்திரன் | வாழ்க்கை அழகானது... வரும் வாய்ப்பை விட்டுவிடாதீர்கள் : ரெட்ரோ பட விழாவில் சூர்யா பேச்சு | குஷ்புவின் எக்ஸ் தளத்தை முடக்கிய ஹேக்கர்கள் | சம்மரில் சூடு பிடிக்கும் தமிழ் சினிமா | மண்டாடி : திறமையான கூட்டணியுடன் களமிறங்கும் சூரி | ரீ என்ட்ரி தரும் அப்பாஸ் | திருமணம் பற்றி த்ரிஷா சொன்ன 'தக் லைப்' |
கடந்த 2006ம் ஆண்டில் ஷாரூக்கான், பிரியங்கா சோப்ரா நடித்து வெளிவந்த படம் ' டான்'. முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து டான் இரண்டாம் பாகம் ஷாரூக்கான் நடித்து கடந்த 2011ம் ஆண்டில் வெளியாகி பெரும் வெற்றியை பெற்றது. இந்த இரண்டு பாகங்களையும் பர்ஹான் அக்தர் தயாரித்து, இயக்கினார். சமீப காலமாக டான் 3ம் பாகம் உருவாக உள்ளது. இதிலும் ஷாரூக்கான் தான் நடிப்பார் என தகவல்கள் வெளியானது.
தற்போது பர்ஹான் அக்தர் தனது டுவிட்டர் பக்கத்தில் 3 ஏ நியூ எரா பிகின்ஸ் என டான் 3ம் பாகத்திற்கு ஹின்ட் கொடுக்கும் விதத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். இப்போது சமூக வலைதளங்களில் இது வைரலாகி வருகிறது.
இந்த நிலையில் டான் 3ம் பாகத்தில் ஷாரூக்கானுக்கு பதிலாக நடிகர் ரன்வீர் சிங் ஹீரோவாக நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இந்த வாரத்தில் வெளியாகும் என கூறப்படுகிறது.