ரூ.5.9 கோடி சொத்து ஆவணம் தாக்கல் செய்யுங்க : ரவி மோகனுக்கு ஐகோர்ட் கிடுக்கிப்பிடி | கட்டுப்படுத்த முடியவில்லை, நிறைய பரோட்டா சாப்பிட்டேன் : நித்யா மேனன் | இந்தியாவில் மட்டும் ரூ.100 கோடி வசூலைக் குவித்த ‛எப் 1' | இட்லி கடை படத்தின் முதல் பாடலின் அப்டேட் தந்த ஜி.வி.பிரகாஷ் | 'பிளாக்மெயில்' புதுவித அனுபவமாக அமைந்தது : தேஜூ அஸ்வினி | 3 நாயகிகள் இணையும் 'தி வைவ்ஸ்' | வேலு பிரபாகரனின் கடைசி படம் | பிளாஷ்பேக் : 450 படங்களுக்கு இசை அமைத்த டப்பிங் கலைஞர் | பிளாஷ்பேக் : சிங்கள சினிமாவின் ஆஸ்தான இசை அமைப்பாளர் | ஆக்ஷன் படங்கள் பண்ண ஆசை : திரிப்தி திம்ரி |
ஷாருக்கான் நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் வெளியான 'பதான்' படம் உலகம் முழுவதும் ஆயிரம் கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்தது. அடுத்ததாக தமிழ் இயக்குனர் அட்லியின் இயக்கத்தில் 'ஜவான்' படத்தில் நடித்து முடித்துள்ளார். 'ஜவான்' படம் செப்டம்பரில் திரைக்கு வர இருக்கிறது.
தற்போது அவர் 'டன்கி' என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் டாப்ஸி மற்றும் விக்கி கவுசல் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்புக்காக ஷாருக்கான் அமெரிக்கா சென்றார். அங்குள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டார். படப்பிடிப்பில் நடந்த சிறிய விபத்தில் ஷாருக்கானுக்கு மூக்கில் காயம் ஏற்பட்டது. மூக்கில் இருந்து தொடர்ந்து ரத்தம் வந்து கொண்டிருந்ததால் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இதையடுத்து அவரது மூக்கு பகுதியில் அறுவை சிகிச்சை நடந்தது. சில நாட்கள் ஓய்வெடுக்க வேண்டும் என்று மருத்தவர்கள் கூறியதையடுத்து படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு இந்தியா திரும்பி விட்டார். அவர் தற்போது மும்பையில் உள்ள தனது இல்லத்தில் ஓய்வு எடுத்து வருகிறார்.