வைஷ்ணவியை கரம் பிடித்தார் வெற்றி வசந்த் | நெப்போட்டிசம் பற்றி கிர்த்தி சனோன் பளீச் | ஹாலிவுட் படத்தில் அறிமுகமாகும் ஜிவி பிரகாஷ், யோகிபாபு | சிவகார்த்திகேயனை கவுரவித்த ராணுவ பயிற்சி மையம்! | சூர்யா 44வது படத்தின் டைட்டில் 'கல்ட்' | உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அஜித்குமார் | வைரலாகும் சித்தார்த் - அதிதி ராவ் திருமண புகைப்படங்கள் | மகிழ்திருமேனி இயக்கத்தில் விக்ரம்? | ஜெயிலர் 2 : ரஜினி பிறந்தநாளில் சர்ப்ரைஸ் | ‛96' படத்தின் இரண்டாம் பாகம் உருவாவது உறுதி |
பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வரும் சல்மான்கான் 57 வயதாகியும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் மோஸ்ட் எலிஜிபிள் பேச்சிலராகவே சுற்றி வருகிறார். கடந்த பல வருடங்களில் அவரது திரையுலக பயணத்தில் பல நடிகைகளுடன் இணைந்து ஒன்றாக சுற்றி கிசுகிசுக்களில் சிக்கினாலும் அவை எதுவுமே திருமண பந்தத்தை நோக்கி நகரவில்லை. இந்த நிலையில் சமீபத்தில் சல்மான்கான் நடித்த கிசி கா பாய் கிசி கி ஜான் திரைப்படம் வெளியாகி ஓரளவு வரவேற்புடன் ஓடிக் கொண்டிருக்கிறது.
அஜித் நடித்த வீரம் படத்தின் இந்தி ரீமேக் ஆக உருவாக்கியுள்ள இந்த படத்தில் சகோதரர்கள் ஒன்று சேர்ந்து தனது அண்ணனுக்கு திருமணம் செய்து வைக்க முயற்சிப்பது தான் கதை. சமீபத்தில் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது சல்மான்கானிடம் நிகழ்ச்சியின் தொகுப்பாளர், இந்த படத்தை போல உங்களது சகோதரர்கள் இருவரும் உங்களது திருமணத்தைப் பற்றி பேசவில்லையா? முயற்சி எடுக்கவில்லையா ? என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்த சல்மான்கான் இதற்கு முன்னால் அவர்கள் என்னை கவனிக்கவில்லை. ஒருவேளை இனிமேல் கவனிக்கலாமோ என்னவோ என்று பதில் கூறினார். அதுமட்டுமல்ல அவரது இரண்டு சகோதரர்களில் ஒருவரான நடிகர் அர்பாஸ் கான், நடிகை மலைக்கா அரோராவுடன் திருமணம் செய்து கொண்டு கடந்த 2017 இல் விவாகரத்து பெற்று பிரிந்தார். அவரது இன்னொரு சகோதரரான சோஹைல் கான் கடந்த வருடம் தான் தனது மனைவியிடம் இருந்து விவாகரத்து பெற்றார். அதனால் என்னிடம் எனது திருமணத்தை பற்றி அவர்கள் பேச பயப்படுகிறார்களோ என்னவோ என்றும் கிண்டலாக பதில் அளித்துள்ளார் சல்மான்கான்.